நடிகர் சங்க கட்டடம் கட்டும் தேதி விரைவில் அறிவிப்பு !

1 minute read
நடிகர் சங்க கட்டடம் கட்டும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆரணிக்கு சனிக்கிழமை வந்திருந்த நடிகர் பிரேம் கூறினார். 
நடிகர் சங்க கட்டடம் கட்டும் தேதி விரைவில் அறிவிப்பு !
ஆரணியில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நடிகர் பிரேம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்புப் பணியை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறோம். 

இதில், சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரது புகைப்படம், வயது, தனித்தன்மை, நடித்துள்ள படங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வெளியிட உள்ளோம்.

வரும் மார்ச் மாதம் புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணி நடைபெறுகிறது. நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சங்கச் செயலர் விஷால், நடிகர்கள் ஏராளமான நல உதவிகளை செய்தனர் என்றார். 

அப்போது, அவரிடம் அஜீத், விஜய் ஆகியோர் நிவாரண உதவித் தொகை கொடுக்காதது ஏன் என கேட்டதற்கு, அது குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது என்றார் நடிகர் பிரேம்.
Tags:
Today | 26, March 2025
Privacy and cookie settings