உண்மையில் சான்டா கிளாஸ் என்பவர் யார் என்று தெரியுமா?

செயிண்ட் நிக்கோலஸ் என்பவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில், தற்போது துருக்கி என அறியப்படும் மைரா என்ற இடத்தில் வாழ்ந்து வந்த ஒரு கிறிஸ்துவ பாதிரியார் ஆவார்.


தன் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால், அவர்களின் சொத்து முழுவதும் செயிண்ட் நிக்கோலஸை வந்தடைந்தது.

அதனால் அவரும் பெரும் பணக்காரராக விளங்கினார்.

மிகவும் நல்லவராகவும் விளங்கினார் இவர். ஏழைகளு க்கு உதவுவதன் மூலமும்,

தேவை உள்ளவர் களுக்கு ரகசிய பரிசுகளை அளிப்பதன் மூலமாக வும் நல்ல பெயரைப் பெற்றிருந்தார்.

செயிண்ட் நிக்கோலஸ் சக்தி

இறந்த குழந்தை களுக்கு மீண்டும் உயிரைப் பெற்று தரும் அபார சக்தியையும் செயிண்ட் நிக்கோலஸ் கொண்டிருந்தார்.

பேகன் கோவில்களை அழித்தல், கடலில் மரணிக்கும் பல கடலோடி களின் உயிர்களை காத்தல் என அவரின் படைப்புகளுக் காகவும் அவர் புகழ் பெற்றிருந்தார்.
சாண்டா கிளாஸ்

சாண்டா கிளாஸ் என அறியப்படும் இந்த சிறுவன், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே உணவருந்தி,


மீதமுள்ள ஐந்து நாட்களுக்கும் விரதம் இருப்பதாக நம்பப் படுகிறது.

தொழில்நுட்ப ரீதியாக தற்போது இது கட்டுக் கதையாக பார்க்கப் படுகிறது. ஆனால் பலரும் இதனை உண்மையென நம்புகின்றனர்.

இனி, செயிண்ட் நிக்கோலஸ் என்பவர் உண்மை யிலேயே யார் என்பதையும்,

அவரை ஏன் கிறிஸ்துமஸ் பண்டிகையின் தந்தை எனவும் சாண்டா கிளாஸ் எனவும் அழைக் கின்றனர் என்பதையும் பார்க்கலாம்.

ஏன் புகைப்போக்கியின் அருகில் காலுறை தொங்கவிடப்படுகிறது?

ஏழையாக இருந்த ஒரு ஆணுக்கு மூன்று மகள்கள் இருந்தார்கள்.

அப்பெண்களு க்கு வரதட்சணை அளிக்க அவனிடம் போதிய பணம் இல்லாததால், அவர்கள் திருமணம் ஆகாமல் இருந்தனர்.
ஒரு இரவு, சாண்டா கிளாஸ் என அறியப்படும் செயிண்ட் நிக்கோலஸ், அவன் வீட்டு புகைபோக்கி

மூலம் தங்க நாணயங்கள் அடங்கிய மூட்டையை ரகசியமாக போட்டார்.

காய்வதற் காக நெருப்பின் அருகில் போடப் பட்டிருந்த காலுரையில் அது விழுந்தது.


அதனால் தான் என்னவோ இன்றளவும் கூட புகைப் போக்கியின் அருகில் காலுறை தொங்க விடப்படு கிறது.

சாண்டா கிளாஸ் என்ற செயிண்ட் நிக்கோலஸ்

அவனுடைய இரண்டாம் பெண்ணின் திருமணத்திற்கும் இது தொடர்ந்தது.

கடைசியாக, யார் இதனை அளித்தது என்பதை கண்டுபிடிக்க தீர்மானித்த அந்த ஏழை தந்தை,

ஒவ்வொரு சாயங்காலமும் நெருப்பின் அருகில் மறைந்து கொண்டான்.

ஒரு நாள் இரவு, தங்கத்தை அளித்து வந்த நபரை அவன் பிடித்து விட்டான்.

அது தான் சாண்டா கிளாஸ் என்ற செயிண்ட் நிக்கோலஸ் என்பதை அவனம் தெரிந்து கொண்டான். சாண்டா கிளாஸ் என்ற செயிண்ட் நிக்கோலஸ்
இதனை வெளியே சொல்லி விட வேண்டாம் என ஏழை தந்தையிடம் நிக்கோலஸ் வேண்டிக் கொண்டார்.

அதற்கு காரணம் தன் மீது கவனம் விழுவதை அவர் விரும்ப வில்லை.

இருப்பினும், வெகு விரைவிலேயே நாட்டிலுள்ள அனைவரின் கவனத்திற்கும் இச்செய்தி காட்டுத்தீ போல் பரவியது.


அதன் பின், யாருக்கு பரிசு கிடைத்தாலும், அது சாண்டா கிளாஸ் அளித்ததே என அனைவரும் நம்பத் தொடங்கி னார்கள்.

சிறந்த துறவி

தன் இரக்க குணத்தின் காரணமாக, நிக்கோலஸ் ஒரு துறவியாக போற்றப் பட்டார்.

இவர் குழந்தை களுக்கு மட்டுமல்லாது மாலுமிகளு க்கும் துறவியாக விளங்கினார்.

கடல் புயலின் போது மாலுமிகளை இவர் காப்பாற்றி யுள்ளார் எனவும் கூறப் படுகிறது. 
உலகம் முழுவதும், சிறுவர்கள் இந்த புனித துறவியை வழி படுகிறார்கள்.

நம் வீட்டு புகைபோக்கி வழியாக இறங்கி வந்து பரிசுகளை வழங்க கோரி, பலர் இவருக்கு கடிதங்களும் எழுது கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings