மழை வெள்ளத்திடம் ஈரத்தை எதிர் பார்க்க முடியாது. அதே நேரம் ஏழை- பணக்காரர் வி.ஐ.பி-காமன்மேன் என்ற பாகுபாடும் வெள்ளத்துக்குக் கிடையாது.
கடந்த டிசம்பரில் சென்னையையே புரட்டிப் போட்ட வெள்ளம், சினிமா செலிபிரிட்டிகளையும் விட்டு வைக்கவில்லை. எனது டாய்லெட்டில் கழிவுநீர் கலந்து விட்டது.
எனக்கே இப்படி என்றால், ஏழை மக்களின் நிலை? என்று பரிதாபப்பட்டு களத்தில் இறங்கி, ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
பல நடிகர், நடிகைகளும் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவக் களமிறங்கினார்கள். ஆனால், சினிமா பிரபலங்கள் சிலரும் வெள்ளத்தினால் கோடிக்கணக்கில் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இசையமைப்பார்கள் ஜி.வி. பிரகாஷும் ஹாரீஸ் ஜெயராஜும் அந்தப் பட்டியலில் அடக்கம்.
வீட்டுக்குள்ள தண்ணி புகுந்தாகூட பரவாயில்லை; காருக்குள்ள தண்ணி புகுந்துடுச்சே! என்று புலம்பி வருகிறார்கள் இருவரும்.
இருவரிடமும் கோடிகள் மதிப்புள்ள ஹம்மர், ஜாகுவார், பிஎம்டபிள்யூ, மினிகூப்பர் மற்றும் லம்போகினி போன்ற கார்கள் இருக்கின்றன.
டிசம்பர் வெள்ளம், இவர்களின் காஸ்ட்லி கார்களுக்குள்ளும் புகுந்து, மிதக்க ஆரம்பித்து விட்டன.
வெள்ளம் வடிந்து ஒரு மாதம் ஆனாலும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு இன்னும் பாதிக்கப்பட்ட கார்கள் என்ட்ரி ஆகிக் கொண்டே இருக்கின்றன.
இதுவரை சென்னையில் இருந்து மட்டும் ஒரு லட்சம் கார்களுக்கு மேல் இன்ஷூரன்ஸ் க்ளெய்முக்காக, ஸ்டார்ட் ஆகாமல் காத்துக் கொண்டிருக் கின்றன.
ஏற்கெனவே விழி பிதுங்கிய நிலையில் இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், காஸ்ட்லி கார்களைக் கண்டு கொள்ளாமலே இருந்து வருகின்றனவாம்.
இதனால், இன்ஷூரன்ஸுக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள் செலிபிரிட்டிகள். இதில் சந்தானமும் ரேஞ்ச்ரோவர் காரும் அடக்கம்!