உலகம் முழுவதும் நீர் புகாத திறன்பேசிகள் பயன் பாட்டில் இருந்தாலும், முதல் முறையாக ஜப்பான் நிறுவனம் சோப்பைக் கொண்டு கழுவக் கூடிய திறன் பேசியினை உருவாக்கி உள்ளது.
இதன் மூலம் திறன் பேசியில், நமது பயன் பாட்டினால் உருவாகும் நுண்ணு யிரிகளை அழிக்க முடியும்.
அதே சமயம், திறன்பேசிகள் தவறி தண்ணீரில் விழுவது பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான கேடிடிஐ (KDDI) தான் இந்த திறன் பேசியினை கண்டு பிடித் துள்ளது.
இது தொடர்பாக அந்நிறு வனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்கள் நிறுவன த்தின் மேம் பாட்டுக் குழு, நாங்கள் உருவாக்கி உள்ள திறன் பேசியினை 700-க்கும் மேற்பட்ட முறை பரிசோதித் துள்ளது.
இதன் மூலம், அதன் நீடிக்கும் திறன் நிரூபிக்கப் பட்டுள்ளது என்று தெரிவித் துள்ளார்.
அடுத்த வாரம் முதல் ஜப்பானில் விற்பனைக்கு வரும் இந்த திறன் பேசியின் விலை 175 அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.