சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச படங்கள், இணையதளங்கள் மற்றும் வாட்ஸ் அப்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ராதிகா ஆப்தே, வசுந்தரா தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஹன்சிகாவின் குளியல் காட்சி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அது ஒரு ஓட்டல் குளியல் அறையில் எடுக்கப் பட்டிருந்தது. இது நிஜமான ஹன்சிகா குளியல் காட்சி வீடியோ காட்சி தானா அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி காட்சியா என்ற சந்தேகங்கள் கிளம்பின.
வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவருக்கு நெருக்கமானவர்கள் மறுத்தனர். வேறு பெண் குளிக்கும் காட்சியை மார்பிங் மூலம் ஹன்சிகா போல் மாற்றியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால் ஹன்சிகா இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது குளியல் காட்சி வீடியோ குறித்து முதல் முறையாக வாயை திறந்துள்ளார்.
அதில், எங்களைப் பற்றிய தவறான வீடியோக்கள், மார்பிங் புகைப் படங்கள் இணைய வுலகத்தில் பரவி வருவது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை.
365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களை சந்தோஷமாக வைத்து இருக்கிறோம். சிலருக்கு எங்களை இழிவு படுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, கற்பழிப்பைவிட கொடுமையானது.
எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும். அந்த படத்தில் இருப்பது நான் அல்ல என்று எல்லோருக்கும் தெரியும். பின்னர் நான் ஏன் புகார் செய்ய வேண்டும்..? எனக்கு அரசியல் வேண்டாம். சினிமா மட்டுமே போதும்.
அரசியல் எனக்கு புரியாது. காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை படப்பிடிப்பு. 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை ‘ஜிம்.’ அதன் பிறகு சந்தோஷமாக தூங்குகிறேன்.
இந்த வாழ்க்கையே போதும். அரசியலுக்கு வந்துதான் சேவை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என இவ்வாறு கூறியுள்ளார்.