அஞ்சலக சேமிப்பு… அழகான லாபம் !

‘அஞ்சல் துறை, அதி கபட்ச பயன்கள் தரும் பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், மக்கள் அதனை குறை வாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அஞ்சலக சேமிப்பு
அஞ்சலக சேமிப்பு, மற்ற எல்லா சேமிப்பு களையும் விட பாதுகாப்பானது, உங்கள் பணத்தை பெருக்கக் கூடியது!’’

என்று அக்கறை யுடன் வழிகாட்டும் சென்னை நகர்  மண்டல அஞ்சல துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் விவரங்கள் தருகிறார் இங்கு..!

அஞ்சலக சேமிப்புக் கணக்கு  (Savings Bank)

‘‘இந்தியக் குடிமகன்கள் யாரும் இந்தக் கணக்கை ஆரம்பிக்க லாம், வயது வரம்பு கிடையாது. பத்து வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தை களுக்கு மட்டும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கலாம்.
தண்டுவட அறுவை சிகிச்சை ஃபெயிலியர் ஆகுமா?
கையெழுத்துப் போடத் தெரிந்த பத்து வயதுக் குழந்தை, தாராளமாகத் தன் பெயரிலேயே கணக்கைத் தொடங்கலாம். 


ஆரம்பத் தொகை 50 ரூபாய் மட்டுமே. செக் வசதி வேண்டு மென்றால், ஆரம்பக் கட்டணமாக 500 ரூபாய் கட்டி கணக்கைத் தொடங்க வேண்டும். வருடத்துக்கு 4% வட்டி கிடைக்கும். வட்டிக்கு 10,000 வரை வரிவிலக்கு உண்டு. 
 ஜாயின்ட் அக்கவுன்ட் வசதி
இரண்டு அல்லது மூன்று நபர்கள் இணைந்த ஜாயின்ட் அக்கவுன்ட் வசதி மற்றும் நாமிநேஷன் உண்டு. அதிக பட்சம் சேமிப்பு என்பது கிடையாது. இந்தக் கணக்கில், எவ்வளவு தொகை வேண்டு மானாலும் வைத்துக் கொள்ளலாம்.

டைம் டெபாஸிட் (Time Deposit – TD)

இது ஃபிக்ஸட் டெபாஸிட். ஒரு முறைதான் பணம் செலுத்த முடியும். ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம் என, ஃபிக்ஸடு காலத்தை தேவையைப் பொறுத்துத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

அந்தக் காலம் முடிந்ததும், சேமிப்புப் பணத்தை வட்டியுடன் பெறலாம். ஒரு வருடம் முதல் மூன்று வருடம் வகைக் கணக்கு களுக்கு 8.4% வட்டி கிடைக்கும். ஐந்து வருடக் கணக்குக்கு 8.5% வட்டி கிடைக்கும். காலாண்டு கூட்டு வட்டி கிடைக்கும்.
முதுகு வலி ஏன் ஏற்படுகிறது? அறிகுறி என்ன?
வயது வரம்பற்ற இந்தக் கணக்கில், ஜாயின்ட் அக்கவுன்ட் வசதியும் பெறலாம். குறைந்த பட்சமாக 200 ரூபாய் டெபாஸிட்டில் ஆரம்பிக்கும் இந்த சேமிப்புக் கணக்கில், 200-ன் மடங்குகளில் எவ்வளவு வேண்டு மானாலும் டெபாஸிட் செய்யலாம்.

ஒருவரே எத்தனை அக்கவுன்ட்டுகள் வேண்டு மானாலும் ஆரம்பித்துக் கொள்ளலாம் என்பதுடன், இதுக்கு லாக் அப் பீரியட் என எதுவும் கிடையாது. டெபாஸிட் பணத்தை எப்போது வேண்டு மானாலும் எடுத்துக் கொள்ளலாம். 



ஐந்து வருட கணக்கில் செலுத்தும் தொகைக்கு வருமானவரி சலுகை உண்டு. கணக்கின் காலம் முடிந்தும் பணத்தை எடுக்க வில்லை எனில், அஞ்சல் துறையே (CBS P.O மட்டும்) அந்தக் கணக்கை புதுப்பித்துக் கொள்ளும்.

மாதாந்தர வட்டித் திட்டம் (Monthly Income Scheme – MIS)

குறைந்த பட்சம் 1,500 ரூபாய் முதல் அதிக பட்சமாக ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் வரை இந்தத் திட்டத்தில் டெபாஸிட் செய்யலாம். ஜாயின்ட் அக்கவுன்ட் எனில் 9 லட்சம் வரை டெபாஸிட் செய்யலாம். ஒரே தவணையாக செலுத்த வேண்டும். 1,500-ன் மடங்குகளில் சேமிக்கலாம்.  

மாதம் 8.4% வட்டி கிடைக்கும். ஐந்து வருடங் களுக்கு கணக்கை தொடர முடியும். தேவைப் பட்டால் ஒரு வருடத்துக்குப் பின் பணத்தை எடுத்துக் கொள்ள லாம். வயது வரம்பு கிடையாது, இதற்கு நாமினேஷன் உண்டு.

சீனியர் சிட்டிஸன் – முதியோர் சேமிப்புத் திட்டம்  (Senior Citizens Savings Scheme – SCSS)

அதிகபட்சமாக… வருடத்துக்கு 9.3% வட்டி கிடைக்கும் சேமிப்புத் திட்டம் இது. இந்த வட்டியை ஒவ்வொரு மாதமும் எடுக்க முடியாது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை தான் எடுக்க முடியும். 
குறைந்த பட்சம் 1,000 ரூபாயில் இருந்து, ஆயிரத்தின் மடங்குகளில், அதிக பட்சமாக ஒருவர் 15 லட்சம் வரை டெபாஸிட் செய்யலாம். இந்தக் கணக்கை ஆரம்பிக்க, 60 வயது முடிந்திருக்க வேண்டும் அல்லது 55 வயது முடிந்து பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். 

ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்றவர் களுக்கு வயது வரம்பு கிடையாது. பணி ஓய்வு பெற்றவர்கள், அவர்களின் பணி ஓய்வுப் பணத்தை ஒரு மாதத்துக்குள் டெபாஸிட் செய்து விட வேண்டும். கணக்கை ஐந்து வருடங்கள் வரை தொடரலாம். 


ஒரு வருடத்துக்கு பின் பணம் தேவைப் பட்டால் எடுத்துக் கொள்ளலாம். ஐந்து வருடங் களுக்குப் பின், தேவைப் பட்டால் கணக்கை மேலும் மூன்று வருடங்கள் தொடரலாம். இந்த திட்டத்துக்கு வரிவிலக்கு சலுகையும் உண்டு.
 வரிவிலக்கு சலுகை
இவை தவிர, ஒன் டைம் டெபாஸிட் முறையைக் கொண்ட கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra – KVP), நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட்ஸ் (National Savings Certificates) திட்டங்களும் உள்ளன.

கிசான் விகாஸ் பத்ரா’ வில் 8.7% வட்டியும், எட்டு வருடம் நான்கு மாதம் வருட வரையறையும் உண்டு. 


நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட்ஸ் திட்டத்தில், இரண்டு வகை உண்டு. ஐந்து வருட திட்டத்தில் 8.5 % வட்டியும், பத்து வருட திட்டத்தில் 8.8 % வட்டியும் பெறலாம். கிசான் விகாஸ் பத்ரா
பெண்களே மறைவான பகுதியா மார்பகம்?
மற்றும் நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட்ஸ்… இவற்றை வங்கிகளில் வைத்து கடன் பெற்று கொள்ளலாம்.

இந்தக் கணக்குகளை எல்லாம் தொடங்க, அடையாள அட்டை, முகவரிச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப் படத்துடன் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை அணுகலாம்.

50 ஆயிரத்துக்கு மேல் டெபாஸிட் செய்தால் மட்டும், பான் கார்ட் அவசியம். மொத்தத்தில், குடிமக்களுக் காக அஞ்சல் துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வரும் சேமிப்புத் திட்டங்களில், அதிக லாபம் பெறலாம் என்பது இப்போது புரிந்ததா..?!’’
Tags:
Privacy and cookie settings