பெண்ணுக்கு ஆணுறையை உண்ண கொடுத்த பொலிஸ் அதிகாரி !

1 minute read
பப்புவா நியூ கினியாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பெண்ணொவரை ஆணுறைகளை உண்ண கொடுத்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த காணொளிகள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அதிகாரி ஒருவர் பொலிஸ் சிறைக்கூண்டில் அடைக்க போவதாக பெண்ணை அச்சுறுத்துகிறார், பெண் இரண்டு ஆணுறைகளை உண்கிறார்.

இதனை ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் பப்புவா நியூ கினியாவின் தலைநகர் பொர்ட் மோர்ஸ்பி அல்லது கிழக்கு மலை பகுதி மாகாணமான கொரோகாவில் நடந்திருக்காலம் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் பொலிஸார் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா, அச்சுறுத்தும் அந்த ஆண் அச்சுறுத்தப்படும் பெண் ஆகியோர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை என பப்புவா நியூ கினியா பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காணொளி தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்தியுள்ள பொலிஸ் ஆணையாளர், காணொளி மற்றும் சம்பவம் பற்றி உடனடியாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings