மிஸ்டு கால் மூலமாக பணப்பரிமாற்றம் செய்யும் சேவையை ஃபெடரல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள தகவலில்,
வாடிக்கையா ளர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப வங்கிச் சேவைகளை வழங்கு வதில் ஃபெடரல் வங்கி தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக மிஸ்டு கால் வாயிலான பணப்பரிமாற்ற சேவைகளை ஃபெடரல் வங்கி அறிமுகம் செய்யப் பட்டுள்ளதாகவும், இதன் மூலம்
வங்கியின் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட தங்கள் செல்பேசியி லிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் வேண்டிய நபர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்து கொள்ள லாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த வசதியினைப் பெற வாடிக்கை யாளர்கள் தங்களது செல்பேசியில் இருந்து எஸ் எம்எஸ் மூலம் ஒருமுறை பதிவு செய்ய வேண்டும்.
அதன்படி, 9895088888 என்ற எண்ணுக்கு ACTMFT < இடைவெளி> பெறுநர் செல்பேசி எண் <இடைவெளி> பெறுநர் வங்கி எண் <இடைவெளி> IFSC எண் <இடைவெளி>
தொகை <இடைவெளி> அனுப்புநரின் வங்கி எண்ணில் கடைசி 3 எண் <இடைவெளி> பெறுநர் பெயர் என்று டைப் செய்து குறுஞ் செய்தி அனுப்ப வேண்டும்.
இதன் மூலம், பதிவு செய்யப்படும்.
பிறகு, பணம் பெறுநர் 7812900900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அனுப்பப் பட்ட தொகை, வங்கி கணக்கில் செலுத்தப் படும்.
இந்த சேவை மூலம் ஒரு நாளை 5 ஆயிரம் வரை அனுப்பலாம். ஆனால், ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் வரை மட்டுமே அனுப்ப முடியும்.