பலமுறை சூடேற்றிச் சாப்பிடக்கூடாத உணவுகள் !

பரபரப்பான வாழ்க்கையில் நம்மால் உணவுகளைச் சமைத்துச் சாப்பிட முடியவில்லை. இதனால் எளிதில் வெறுமனே சூடேசூடேற்றி சாப்பிடக்கூடிய உணவுகளை நாடுகின்றோம். 


இப்படி இருப்பதால் தான் என்னவோ, இன்றைய தலைமுறை யினருக்குப் பல்வேறு நோய்கள் வேகமாகத் தாக்குகின்றன.

அதிலும் காலையில் எழுந்து சமைப்பதற்கு நேரம் இல்லை என்று, இரவிலேயே உணவை சமைத்து வைத்து விட்டு, மறுநாள் காலையில் அவற்றைச் சூடேற்றிச் சாப்பிடுவோர் பலர். 

ஆய்வு ஒன்றில், சமைத்த உணவுகளை அளவுக்கு அதிகமாகச் சூடேற்றிச் சூடேற்றி உட்கொள்வதால், அதில் உள்ள சத்துக்கள் வெளியேறுவதோடு, சில உணவுகள் விஷமிக்கதாகவும் மாறுகின்றன. எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளது.

அத்தகைய சிக்கனை 2-3 முறைக்கு மேல் சூடேற்றி உட்கொண்டால், அதன் காரணமாக பல்வேறு செரிமானப் பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.


எனவே சிக்கனை வாங்கிச் சமைத்தால், தேவையான அளவு மட்டும் உபயோகித்து விட்டு, மீதமுள்ள ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். 

பசலைக் கீரையில் இரும்புச் சத்தும், நைட்ரேட்டுகளும் வளமாக உள்ளது. இதனைப் பலமுறை சூடேற்றினால், அதில் உள்ள நைட்ரேட்டுகள், நைட்ரைட்டு களாக மாற்றப் படுவதோடு, புற்று நோயை உண்டாக்கும் கார்சினோ ஜென்களாகவும் மாறும். 

எனவே இந்த உணவுப் பொருளைப் பலமுறை சூடேற்றாதீர்கள். முட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்தும் சாப்பிடக் கூடாது. 


ஆய்வு ஒன்றில் முட்டையை பலமுறை சூடேற்றி உட்கொண்டால், அது நச்சுமிக்கதாக மாறி, செரிமான மண்டலத்தைக் கடுமையாகப் பாதிப்பதாகத் தெரிய வந்துள்ளது. எனவே கவனமாக இருங்கள். 

காளான்களில் காம்ப்ளக்ஸ் புரோட்டீன்கள் உள்ளதால், இதனை வாங்கி ஒரு முறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றாதீர்கள். இதனால் தீவிரமான விளைவைச் சந்திக்க நேரிடும். 

உருளைக் கிழங்கை ஒருமுறை சமைத்த பின்னர், மீண்டும் சூடேற்றி உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் இதில் உள்ள ஒருசில சத்துக் களானது பலமுறை சூடேற்றும் போது நச்சு மிக்கவையாக மாறிவிடும்.

மேலும் உருளைக் கிழங்கைப் பொரித்துச் சாப்பிடுவதைத் தவிர்த்து, வேக வைத்துச் சாப்பிடுங்கள். இதனால் அதிலிருந்து முழுச் சத்தையும் பெற முடியும்.
Tags:
Privacy and cookie settings