அரசியலில் ஒரே சம்பவம் ஒருவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று நிறுத்தும். அதே போல இன்னொரு சம்பவத்தால் ஒருவர் அதலப் பாதா ளத்தில் வீழ்வதும் சாத்தியம் தான்!
ஒரே ஒரே ஒரு புகைப் படத்தால் தனது வாழ்க்கை இப்படித் தலை கீழாக மாறும் என லெம்பா பந்தாய் நாடாளு மன்ற உறுப்பினரும்,
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகளுமான நூருல் இசா கனவிலும் நினைத் திருக்க மாட்டார்.
சூலு சுல்தான் மகளுடன் எடுத்துக் கொண்ட அந்தப் புகைப் படத்தின் காரணமாக, நேற்று உச்சகட்ட தாக்குதலாக
நேற்று மலேசிய நாடாளு மன்றம் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடி க்கை எடுக்க வாக்களி த்துள்ளது.
கண்ணீருடன் நூருல் இசா…
2013இல் சபா மீது தாக்குதல் தொடுத்த சூலு சுல்தானின் மகளுடன் இணைந்து புகைப் படம் எடுத்துக் கொண்டத ற்காக,
தனது நாடாளு மன்ற சத்தியப் பிரமாண த்திற்கு எதிராக, நாட்டின் அரசியல் சாசனத் திற்கு புறம்பாக நடந்து கொண்டார்,
நாட்டைப் பாதுகா க்கத் தவறினார் என்ற காரண ங்களைக் காட்டி அவர் மீது ஒழுங்கு நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவரை நாடாளு மன்ற உரிமைகள்
மற்றும் சலுகைகளு க்கான துணைக் குழுவுக்கு பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று நேற்று நாடாளு மன்றத்தில் நிறை வேற்றப்ப ட்டுள்ளது.
அந்த தீர்மான த்தின் வாக்களிப்பு நிறை வேறுவதை கண்ணீருடன் கவனித்துக் கொண்டி ருந்தார் நூருல் இசா.
தீர்மான த்திற்கு ஆதரவாக 105 உறுப்பினர்களும் எதிராக 77 உறுப்பி னர்களும் வாக்களி த்துள்ளனர்.
முன்னதாக, அந்தப் புகைப்படம் எந்த சூழ்நிலை யில் எடுக்கப் பட்டது, ஏன் எடுக்கப் பட்டது என்ற விவரங் களை நூருல் இசா நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்.
அன்வாரின் விடுதலைக்காக ஆதரவு தெரிவித்துப் போராடும் பிலிப்பைன்ஸ் குழு வொன்று மணிலாவில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது
அங்குள்ளவ ர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தாகவும்,அந்தக் கூட்டத்தில் தான் ஜேசல் கிராம் கலந்து கொண்ட தாகவும் நூருல் தனது நாடாளு மன்ற உரையில் குறிப்பிட்டார்.
இது ஒரு எதிர்பாராத சந்திப்பு என்றும் முன்கூ ட்டியே ஜேசல் கிராமைச் சந்திக்கத் தான் முன்கூட்டியே திட்டமிட வில்லை என்றும் நூருல் வலியுறு த்தினார்.
தனது செய்கை க்காக தான் வருந்து வதாகவும், சூலு சுல்தான் தாக்குதலால் பாதிப் படைந்த குடும்ப ங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள் வதாகவும், நூருல் தெரிவித் துள்ளார்.
ஏற்கனவே, சபா சட்ட மன்றம் நூருல் அந்த மாநிலத் திற்குள் நுழையக் கூடாது எனத் தடை விதித்து தீர்மானம் ஒன்றை நிறை வேற்றி யுள்ளது.
தொடர்ந்து இந்தப் புகைப்பட சர்ச்சை தொடர்பாக காவல் துறையில் தனது விளக்க ங்களை நூருல் இசா அளித்தி ருந்தார்.
இதைத் தொடர்ந்து நூருல் மீது நாடா ளுமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் நாடா ளுமன்ற உறுப்பினர் பதவி யையே இழப்பாரா என்ற கேள்வியும் எழுந்து ள்ளது.
அதே வேளை யில், இந்த சம்பவம் மூலம் நாடு முழுமை யிலும் உள்ள மக்களின் பார்வை நூருல் இசா மீது பதிந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.
2.6 பில்லியன் சொந்த வங்கிக் கணக்கில் வந்ததற்கே காரணம் சொல்ல யாருமே முன் வராத பட்சத்தில், ஒரு புகைப்பட த்திற்காக ஒரு பெண்ணின் மீது இத்தனை
கண்டன ங்களா – இத்தனை தாக்கு தல்களா – என்ற ரீதியில் நூரு லுக்கு நாடு முழுமையிலும் அனுதாப அலை பெருகி வருகி ன்றது என்பதையும் மறுக்க முடியாது.
கண்டன ங்களா – இத்தனை தாக்கு தல்களா – என்ற ரீதியில் நூரு லுக்கு நாடு முழுமையிலும் அனுதாப அலை பெருகி வருகி ன்றது என்பதையும் மறுக்க முடியாது.