இஸ்ரேல் ராணுவம் 13 வயது சிறுமியை சுட்டுக் கொன்றது !

13 வயதேயான பாலஸ்தீன சிறுமியை, தாக்குதல் நடத்த வந்தார் என்று கூறி இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ள செயல் பலரயைும் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. 
இஸ்ரேல் ராணுவம் 13 வயது சிறுமியை சுட்டுக் கொன்றது !
மேற்குக் கரை பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அல்மான் குடியேற்றம் என்ற பகுதியில் அந்தச் சிறுமியை இஸ்ரேலிய வீரர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.

இந்த பகுதியானது ஜெருசலேமுக்கு அருகே உள்ளது. அந்த சிறுமியின் பெயர் ருக்கய்யா ஈத் அபு ஈத் என்பதாகும். 

இஸ்ரேல் ரணுவத்தினர் கடந்த நான்கு மாதங்களில் கொடூரமாக கொலை செய்த சிறார்கள் வரிசையில் 29வதாக இந்த சிறுமியின் மரணம் சேர்ந்தஉள்ளது.

இது குறித்து இஸ்ரேல் போலீஸ் செய்தித் தொடர்பாளர் லுபா அல் சம்ரி கூறுகையில், சிறுமி அபு ஈத் தனது பெற்றோருடன் சண்டை போட்டுள்ளார். 

பின்னர் கோபத்தில் வீட்டை விட்டுப் போயுள்ளார். மறுபடியும் அவர் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த போது தனது கையில் வைத்திருந்த கத்தியால் பாதுகாவலரை குத்த முயன்றார். 

இதையடுத்து தற்காப்புக்காக பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டார். இதில் சிறுமி உயிரிழந்தார் என்று கூறினார். ஆனால் போலீஸாரின் கூற்றை அபுவின் தாயார் மறுத்துள்ளார். 

தனது மகளிடம் கத்தியே இல்லை என்றும், வேண்டும் என்றே தான் தனது மகளை சுட்டுக் கொன்றுள்ளனர் இஸ்ரேலியர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் 13 வயது சிறுமியை சுட்டுக் கொன்றது !
மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம், காஸா முனை ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு அட்டகாசமும், அட்டூழியமும் செய்து வருகிறது இஸ்ரேல்.

இதில் சிக்கி பல அப்பாவி பாலஸ்தீனியர்கள் தினசரி செத்து விழுகின்ன்றனர். இந்த வரிசையில் ருக்கய்யாவின் மரணமும் இணைந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings