தனது நேர்மை கேள்விக்குறி ஆக்கப் டுவதால் பத்மஸ்ரீ விருதை தவிர்ப்பதாக எழுத்தாளர் ஜெய மோகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கப் போகிறது என்ற தகவல் ஒரு மாதத் துக்கு முன்பே தெரிந்தது.
எனது எழுத்துக்களின் தீவிர வாசகரான கலாச்சாரத் துறை உயரதிகாரி ஒருவரால் தான் எனக்கு விருது வழங்க வேண்டும் என்ற எண்ணம் வைக்கப் பட்டது.
முழு மகாபாரத த்தையும் வெண் முரசு நாவலாக எழுதும் போதே அதை நாடு கவனிக்க வேண்டும் என்ற முயற்சியை எனது நண்பர்கள் எடுத்து வந்தனர். இந்தச் சூழலில் தான் எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்ப ட்டுள்ளது.
ஆனால், எனக்கு விருது வேண்டாம் என்று மறுத்து விட்டேன். தமிழ்ச் சூழலில் எழுந்த அவதூறுகளால் இந்த அரசிடம் இருந்து விருதுகளை பெறுவதில்லை, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற் பதில்லை என்று முடிவு செய்திருந்தேன்.
இந்து மெய்யிய ல்மேல் எனக்கி ருக்கும் அழுத்த மான நம்பிக் கையை முன் வைத்தே எழுதி வருகிறேன்.
கசப்பும் காழ்ப்பு களும் ஓங்கிய தமிழ் கருத்துச் சூழலில் திரிபு களையும், அவதூறு களையும், அவமதிப்பு களையும், புறக்கணிப்பு களையும் கடந்து பல்வேறு தாக்குதல்களை தாண்டி 30 ஆண்டு காலமாக என்னை உருவா க்கிக் கொண்டு ள்ளேன்.
பத்மஸ்ரீ விருதால் அது கேள்விக் குள்ளாகும் என்றால் அதை நான் தவிர்த்தே ஆக வேண்டும். இதில் எனக்கும் பெரும் வருத்தம் உண்டு. எனினும், இதை நான் தவிர் க்கிறேன். இவ்வாறு ஜெய மோகன் கூறியு ள்ளார்.