பெண் பயணியிடம் தவறாக நடக்க முயற்சி எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு !

1 minute read
ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடக்க முயன்றதாக பீகார் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண் பயணியிடம் தவறாக நடக்க முயற்சி எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு !
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ஜோஹிகாட் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் சர்பாஸ் ஆலம்.

ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர், ரயில் பயணி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக ரயில்வே போலீசார் வழக்கப்பதிவு செய்துள்ளனர்.

டெல்லி - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சர்பராஜ் ஆலம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று பயணம் செய்துள்ளனர்.

அப்போது அதே ரயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரிடம் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் அந்த பயணி அளித்த புகாரின் பேரில் சர்பராஜ் ஆலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக 

பாட்னா ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் பிஎன் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:
Today | 29, March 2025
Privacy and cookie settings