குண்டான ஆண்களை விரும்பும் பெண்கள் !

பெண்களைக் கவரும் கட்டழகன்’ என்ற வாசகம் வந்தாலே நமக்கு ‘சிக்ஸ்பேக்’ ஆண்கள் தான் ஞாபகத் துக்கு வருவார்கள். ஆனால் தற்போது ‘டிரெண்டு’ மாறி வருகிறது.

குண்டு ஆண் களையும் பெண்கள் விரும்பத் தொடங்கி யிருக்கிறார் களாம். குறிப்பாக, இங்கிலா ந்தில் உள்ள பெரும்பாலான இள ம்பெண்களு க்கு, கட்டுடல் தோற்றம் உடைய ஆண்களை

விட அதிக எடையுள்ள குண்டான ஆண்கள் மேல் தான் அதிகம் விருப்பம் உள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலா ந்தைச் சேர்ந்த பிரபல ஆடை நிறுவனம் ஒன்று,

இளம் பெண்கள் எந்த விதமான தோற்றம் உடைய ஆண்களை மிகவும் விரும்பு கிறார்கள் என தெரிந்து கொள்ள சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

18 வயது இளம் பெண்கள் மற்றும் அதற்கு மேல் வயதுடைய சுமார் 2,544 பெண்க ளிடம் ஆய்வு நடத்தப் பட்டது. பெண்கள் ‘சிக்ஸ்பேக்’ வயிற்றுடன், திடமான கைகள் மற்றும் தோள்கள் உடைய ஆண்க ளையே விரும்பு வார்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. 

ஆனால், இந்த கருத்துக்கு நேர் எதிராக சுமார் 38 சதவிகித பெண்கள் தங்களுக்கு கரடி போன்று குண்டான வயிறு மற்றும் அதிக எடை யுடைய ஆண்க ளையே மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளனர். 

இதற்கு என்ன காரணம் என பெண்க ளிடம் கேள்வி எழுப்பிய போது, கட்டுடல் ஆண்களை விட குண்டான ஆண்கள் தான் தங்கள் அழகையும், பழக்க வழக்கங்க ளையும் நன்கு அறிந்து புகழ்வா ர்கள் என கூறி யுள்ளனர்.

அதுமட்டு மல்லாமல், குண்டான ஆண்கள் பெண்களிடம் மரியாதை யாகவும், அன்பாகவும் நடந்து க்கொள்வார்கள் என்பதாலேயே அவர்களை மிகவும் பிடிக்கும் என்று கூறி யுள்ளனர்.


இந்த ஆய்வை மேற் கொண்ட ஆடை நிறுவனத்தின் நிர்வாக இயக்கு னரான டேரல் பிரீமேன், எந்த மாதிரியான ஆண்களை பெண்கள் அதிகம் விரும்பு கின்றனர் என்ற புள்ளிவிவரத்தை வெளி யிட்டுள்ளார்.

அந்தப் புள்ளி விவரத்தின் படி, குண்டான, அதிக எடையுடைய ஆண்கள் 38 சதவீத பெண்கள் விரும்பு கின்றனர். அதே வேளையில், கட்டுடல் தோற்றம் உடைய ஆண்களை 21 சதவீதம், ஆறடி உயரத்துக்கு

மேல் உள்ள ஆண்களை 13 சதவீதம், அதற்கு சற்றுக் குறை வான உயரமுள்ள ஆண்களை 10 சதவீதம், ஒல்லியான, குள்ளமான தோற் றமுள்ள ஆண்களை 9 சதவீதம் பெண்கள் விரும்பு வதாக மனம் திறந்து ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings