84 வயது பெத்தம்மாள்.. களை கட்டிய பொங்கல் விழா !

தூத்துக்குடி அருகே நடந்த பொங்கல் விழாவில் பராம்பாரிய விளையாட் டுகளில் இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வம் காட்டினர்.
84 வயது பெத்தம்மாள்.. களை கட்டிய பொங்கல் விழா !
தமிழர் திருநாளான தைப் பொங்கலை ஓட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம், நகரங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப் படுவது வழக்கம். இதன்படி விளையாட்டி போட்டிகள் நடத்தப்பட்டன. 

இதில் பெரியவர்கள், பெண்கள், சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இளைஞர்களுக்கு வீர விளையாட்டான இளவட்ட கல்தூக்குதல், பானை உடைத்தல், சடுகுடு போன்ற விளை யாட்டுகள் நடத்தப் பட்டன.

இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் இளவட்ட கல் தூக்க ஆர்வம் காட்டியது அங்கிருப் போரை ஆச்சரியப் படுத்தியது. 

இந்த கல் எடை சுமார் 100 கிலோவுக்கு குறையாமல் இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இதில் இளம் பெண்களும் கலந்து கொண்டு மல்லு கட்டியது அங்கு கூடியிருந்த பொது மக்கள் உற்சாகப் படுத்தியது.

அவர்களை முதிய பெண்கள் உற்சாகப் படுத்தினர். இரண்டு குழுக்களாக பிரிக்கப் பட்ட கபடி போட்டியும் நடத்தப் பட்டது.

மேலும் இளம் பெண்களுக்கு பாண்டி ஆட்டம், சங்கா, தவிடா, திருவை திரித்தல், ஓட்டப் பந்தம், குலை குலையா முந்தரிக்காய் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப் பட்டன.
திருவை திருத்தல் போட்டியில் 84 வயதான பெத்தமாள், 65 வயதான முனியம்மாள் என்ற பாட்டிகளும் கலந்து கொண்டு பார்வை யாளர்களை மெய்சி லிரிக்க வைத்தனர்.

பாண்டி விளையாட்டில் இளம் தலை முறையினர் ஆர்வம் காட்டினர். காலை முதல் தொடங்கிய வி்ளையாட்டி மாலை வரை தொடர்ந்து நடந்தது குறிப்பிடத் தக்கது.

இந்த பழமையை மறக்காமல் இருப்பது தென் மாவட்ட மக்களை உற்சாகத்தில் வைத்துள்ளது.
Tags:
Privacy and cookie settings