மானியத்தின் மறுபக்கம் | The other side of subsidy !

அரசுக்கு நிதிச் சுமை ஏற்படுத்தும் விஷய ங்களில் முக்கிய பங்கு வகிப்பவை மானிய ங்கள் தான். ஆரம்பத்தில் பெட்ரோல், டீசலுக்கு அளிக்கப் பட்ட மானியம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு இப்போது சந்தை விலையி லேயே அனைவரும் வாங்கும் நிலை உருவாகி யுள்ளது.
இப்போது சமையல் எரிவாயு எனப்படும் எல்பிஜி மற்றும் கெரசின் ஆகியவற் றுக்கு அளிக் கப்படும் மானியம் மிகப் பெரும் சுமையாகவே இருந்து வருகிறது.

உண்மை யிலேயே ஏழை, எளியவர் களுக்கு இந்த மானியம் சென்றடை கிறது என்றால் அதை யாரும் தடுக்க முடியாது. ஆரம்பத்தில் பொதுவாக அளிக்கப் பட்ட மானியம் அனைத்துத் தரப்பி னரையும் சென்றடைந் ததால் மானியச் சுமை அதிக மானது.

மானிய த்தொகையை முறைப் படுத்த மத்தியில் பொறுப்பேற்ற பாஜக அரசு மானி யத்தை சம்பந்தப் பட்டவர்க ளின் வங்கிக் கணக்கில் சேர்ப்பது என்பதை முதலில் செயல் படுத்தியது.

மானியத் தொகையை நேரடியாக பயனா ளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் (டிபிடி) திட்டத்தின் மூலம் போலியாக ஆதாய மடைந்தவ ர்கள் ஒழிக்கப் பட்டனர்.

பிறகு வசதி படைத் தவர்கள் மானிய த்தை விட்டுத் தரலாம் என்ற வேண்டு கோள் விடுக்க ப்பட்டது. அமைச் சர்களும், எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள் இதை ஏற்று மானி யத்தை விட்டுத் தந்தனர்.

அடுத்த கட்டமாக நீங்களே மானியத்தை விட்டுத் தாரு ங்கள் என்று கோரிக்கை விடுத் தது. இதைக் கேட்டு சிலர் மானியத்தை விட்டுத் தந்தனர்.

சிலிண்டர் பதிவு செய்வதற்கு குரல்வழி தேர்வு முறை (ஐவிஆர்எஸ்) அமலில் இருந் ததால் அதிலும் இத்தகைய கோரிக்கை விடுக்கப் பட்டது. இந்த வழியில் 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் மானி யத்தை விட்டுத் தந்தனர்.

தற்போது ஜனவரி முதல் ரூ. 10 லட்சம் வருமானம் ஈட்டும் குடும்பத் தினருக்கு எல்பிஜி மானியம் கிடையாது என நிதி அமைச்சகம் அறிவித்துவிட்டது.

வருமான வரி செலுத்து வோரில் ரூ. 10 லட்சத்து க்கு மேலான வரி செலுத்து வோர் எண்ணிக்கை 19 லட்ச மாகும். இவர்களு க்கு இனி மானியம் கிடையாது.

மொத்தம் வரி செலுத்தும் 47 லட்சம் மாதாந்திர சம்பள தாரர்களில் ரூ.10 லட்சத் துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் 19 லட்சம் என வருமான வரித்துறை கணக்கிட் டுள்ளது.

வருமான வரியை செலுத்து வோரில் மாதாந்திர சம்பளம் பெறுவோர் தான் வரியை ஒழுங்காக செலுத்து கின்றனர் (சம்பளத்தில் பிடித்தம் செய்யப் பட்டு கட்டப்ப டுகிறது என்பது வேறு விஷயம்).

அதேசமயம் வர்த்த கர்கள், விவசா யத்தில் அதிக வருமானம் ஈட்டுவோர் உரிய கணக் குகளை தாக்கல் செய்வ தில்லை. ஆனால் இவர்க ளுக்கு சமையல் எரிவாயு மானியம் தொடரும். ஏழை,

எளியோருக்கு மானியம் அளிப்பதை ஏற்கலாம். வசதி படைத்தவர்களும் இதை ஏற்பதை எப்படி நியாயப் படுத்த முடியும்? ஆண்டுக்கு 132 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை யாகிறது.

இதற்கு அளிக்க ப்படும் மானியம் மட்டும் ரூ. 26,268 கோடி. நாட்டில் மொத்தம் 16.35 கோடி வாடிக்கை யாளர்கள் உள்ளனர். தானாக முன்வந்து மானியத்தை விட்டுக் கொடுத் தவர்கள், ரூ. 10 லட்சம் வருமான வரம்பு விதிக்கப் பட்டதால் மானிய

வரம்பிற்குள் வராதவர்கள் ஆகியோரை சேர்த்து கணக் கிட்டால் மொத்தம் சுமார் 25 லட்சம் பேர் தான் வரு கின்றனர். மற்றவர்கள் அனைவரும் மானியம் பெற தகுதி படைத்தவர்களா?

சந்தை விலைக்கு சிலிண்டரை வாங்கும் சக்தி படைத்த வர்கள் தாமாக முன்வந்து விட்டுத் தர வேண்டும். அரசு படிப்படியாக நடவடிக்கை எடுத்து உங்களுக்கு மானியம் கிடையாது என்று தடால டியாக கூறும் வரை தொடரத் தான் வேண்டுமா?
Tags:
Privacy and cookie settings