அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள பழ.கருப்பையா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு, கழிவு நீர் கால்வாய் இணைப்புக்கு கூட
லஞ்சமாக பெருந்தொகை தரும் சூழல் உள்ளது என்றும், இயற்கை வளம் சூறை யாடப் படுகிறது என்றும் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை துறைமுகம் சட்டப் பேரவை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பழ.கருப்பை யாவை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புக ளிலிருந்தும்,
அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று அதிரடியாக நீக்கினார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப் பட்டது குறித்து பழ.கருப்பையா இன்று செய்தியா ளர்களை சந்தித்தார்.
அப்போது, நான் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு ஜெயலலிதா தான் காரணம். சட்டமன்ற உறுப்பினராக இருப்பது மரியாதைக்காக அல்ல.
மக்களுக்காக சேவை செய்யவே சட்டமன்ற உறுப்பினர் பதவி. துக்ளக் விழாவில் இன்றைய அரசியல் நிலை குறித்து நான் பொதுவாகத் தான் பேசினேன்.
முதல்வர் ஜெயலலி தாவை பலமுறை சந்தி்க்க முயற்சி செய்தும் முடிய வில்லை.
கட்சியி லிருந்து நீக்கப்படும் அளவுக்கு நான் பெரிய தவறு ஏதும் செய்ய வில்லை. அதிமுகவில் இருந்து நீக்கி யதை மனப்பூர் வமாக ஏற்றுக் கொள்கிறேன்.
அரசியல் பற்றி பொதுவாக பேசியது முதல்வருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி யிருக்கும் என நினைக் கிறேன். முதல்வரின் அரசியல் பழக்கம் எனக்கு பொருந்த வில்லை.
எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டேன். ராஜினாமா கடிதத்தை சபாநாய கருக்கு அனுப்பி விட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை வாங்க அவர் மறுக்கிறார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதே நெறி சார்ந்த அரசியல். தற்போதுள்ள கட்சித் தாவல் தடைச்சட்டம் துருப் பிடித்தது.
ஆடு மாடுகளை மேய்ப்பது போல தொண்டரை மேய்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. மூன்றாயிரம் ஆண்டுகளாக இருந்த மலைகள் தற்போது மாயமாகி விட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் முறை எனக்கு பிடிக்கவில்லை. அதிமுகவில் இருந்து ஜெயலலிதா என்னை நீக்கியது நியாயம் தான்.
கழிவு நீர் கால்வாய் இணைப்புக்கு கூட லஞ்சமாக பெருந்தொகை தரும் சூழல் உள்ளது. இயற்கை வளம் சூறையாடப் படுகிறது.
அதன் வருவாய் அரசுக்கு வருவதில்லை. திருவள்ளூர் ஆண்டு சித்திரை மாதத்துடன் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.
எம்எல்ஏ வாக நான் தோற்று போனேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. பணம் தான் மிகப்பெரிய சிபாரிசாக இருக்கிறது.
சிபாரிசு செய்ய எம்எல்ஏ தேவையில்லை. பணமே அந்த சிபாரிசை செய்து விடும் என்று குற்றம் சாட்டினார்.