சாலைகளில் விளம்பர பேனர்கள் வைக்க கூடாது !

சாலைகளை விளம்பர பேனர்கள் வைப்பதற்கு பயன் படுத்தக் கூடாது என்று மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித் துள்ளார்.
சாலைகளில் விளம்பர பேனர்கள் வைக்க கூடாது !
அண்மையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடை பெற்றது. அப்போது சாலைகளின் இருமருங்கிலும் வைக்கப் பட்டிருந்த பேனர்கள் பொது மக்களிடம் முகச் சுளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் பேனர்களை வைத்து பொதும க்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திமுக தலைவர் கருணாநிதியும் குற்றம் சாட்டி அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் அரவக் குறிச்சியில் சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சி நடை பெற்றது. 

இதில் கலந்து கொண்ட மக்களவை துணை சபா நாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை பேசுகை யில், சாலைகளில் எந்த ஊருக்கு எப்படி போவது என்ற போர்டுகளே தெரிய வில்லை.
விளம்பர போர்டுகள் தான் கண்ணுக்கு தெரிகின்றன. வாகன த்தை ஓட்டுபவர் களுக்கு என்ன விளம்பரம் என்று தான் பார்க்க தோணுகிறதே தவிர, சாலையில் வாகனத்தை ஒழுங்காக ஓட்ட வேண்டும் என்ற கவனம் சிதறு கிறது. 

சாலை என்பது பாதுகாப்பான போக்கு வரத்துக் காக இருக்க வேண்டும். சாலை களை விளம்பர பேனர்களை வைப்பதற்கு பயன் படுத்தக் கூடாது என்றார்.
Tags:
Privacy and cookie settings