அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து அக்கட்சி எம்.எல்.ஏ.வான எர்ணாவூர் நாராயணனை நீக்கி உள்ளார் சரத்குமார்.
கடந்த 2011 சட்ட மன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டி யிட்ட சரத்குமார் தலைமை யிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதுவும் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதில் ஒருவர் கட்சித் தலைவரான சரத்குமார், மற்றொருவர் எர்ணாவூர் நாராயணன்.
இந்நிலையில் எர்ணாவூர் நாராயணனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதாக அறிவித் துள்ளார் சரத்குமார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கடசியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ள நிலையில், கூட இருந்த ஒரே ஒரு எம்.எல்.வையும் கட்சியிலிருந்து சரத்குமார் நீக்கி உள்ளது அக்கட்சியி னரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் நீக்கத்திற்கான காரணத்தை நாளை நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் வெளியிடக் கூடும் என எதிர் பார்க்கப்படு கிறது.