நமது நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை சடங்கு, சம்பிர தாயம் என பலவன இருக்கி ன்றன. இதில் ஒன்று தாம் சாந்தி முகூர்த்தம் என கூறப்படும் முதலிரவு.
திருமணம் முடிந்த முதல் நாள் அல்லது, ஓர் நல்ல நாள் பார்த்து தம்பதிகள் தங்கள் தாம்பத்திய வாழ்க் கையை துவக்க இந்த சடங்கு பின்பற்றப் படுகிறது. பால் உடலை சுத்தப் படுத்த உதவும் ஓர் கருவியாக கருதப்பட்டு வருகிறது.
இல்லற வாழ்க் கையை தொடங்கும் இடமாக விளங்கும் முதலிரவன்று பால் அருந்தி தொடங் குவதால், அந்த வாழ்க்கை தூய்மை யாக துவங்கு கிறது என்று கருதி வந்து ள்ளனர்.
உடல் அசதியாக இருக்கும் தம்பதி களின் உடலை புத்துணர்ச்சி அடைய உதவும் பானம் பால். இது உடலில் உள்ள சோர்வை போக்கி சுறுசுறுப்பை தரும்.
மற்றும் பாலில் இருக்கும் டிரிப்டோபென் (Trytophan) எனப்படும் அமினோ அமிலம் உடலை இலகுவாக உணர உதவுமாம். இதற்கா கவும் கூட பால் அருந்தி வருவது முதலிரவு வழக்கத்தில் சேர்க்கப் பட்டிருக்க லாம்.
குங்குமப்பூ, மஞ்சள் போன்றவை கலந்து பாலை பருகுவது பாலு ணர்வை தூண்ட உதவுகிறது. இதனால், தாம்ப த்தியம் சிறக்கும் என்பதாலும் முதலிரவில் பால் பருகுவது வழக்கமாக பின்பற்றுப் பட்டுள்ளது.
மேலும் அக்காலத்தில் பாலில் அஸ்வகந்தா கலந்து குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது . அபூர்வ இந்திய மூலிகை களில் ஒன்றான அஸ்வகந்தா உடலுறவு வாழ்க் கைக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது ஆகும்.