நடுவழியில் இறக்கி விடப்பட்ட இளம்பெண் காரணம் தெரியுமா?

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் பேருந்தில் இருந்து ஓட்டுனரால் நடு வழியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
நடுவழியில் இறக்கி விடப்பட்ட இளம்பெண் காரணம்  தெரியுமா?

பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் பகுதியில் வசித்து வரும் 15 வயது சஹ்ரா சாதிக் என்ற இளம்பெண் நண்பர்களுடன் திரை யரங்கம் செல்ல பேருந்தில் ஏறியுள்ளார். 


அப்போது சஹ்ராவின் நண்பர்கள் சிறுமிகளுக்கான கட்டண சலுகை பயணச் சீட்டினை நடத்துனரிடம் காட்டியுள்ளனர்.

ஆனால் சஹ்ரா தமது சீட்டை காட்டிய போது அதை பரிசோதித்த நடத்துனர், 

அவர் 16 வயது நிரம்பாதவர் என்பதை நம்ப மறுத்ததுடன், பேருந்தில் இருந்து வலுக் கட்டாயமாக நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

நண்பர்க ளுடன் திரையரங்கம் செல்வதால் சஹ்ரா அதிக அலங்காரம் செய்து கொண்ட தாகவும், அதனால் வயது அதிகமான வராக கருதப்பட்ட தாகவும் கூறப் படுகிறது.

இதனி டையே, சஹ்ரா சிறுமியர் பயணச் சீட்டை காட்டி ஏமாற் றியதாக கூறி 35 பவுண்ட் அபராதம் விதித்ததுடன், கைகளை பின்னால் கட்டிய வாறே நடந்து செல்ல வேண்டும் எனவும் கூறி 4 மைல் தூரம் நடக்க வைத்துள்ளனர். 

இச்சம்பவம் அவரை கடுமையாக பாதித்து ள்ளதாக கூறும் உறவினர் ஒருவர், ஒரு குற்றவாளி போன்று சஹ்ராவை நடத்தி யுள்ளனர் என்றார்.


இதனிடையே பேருந்து நிர்வாகத்திடம் இது குறித்து முறை யிட்ட போது, அவர்களின் பதில் முற்றிலும் முரணா னதாக இருந்ததாக கூறும் அந்த உறவினர், 

வயதை உறுதி செய்யும் பொருட்டு கடவுச் சீட்டினை கொண்டு சென்றிரு க்கலாம் என கூறியதாகவும் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings