மருத்துவர் வி.சாந்தா, நடிகர் ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது | Vicanta doctor, Padma Vibhushan award to actor Rajinikanth !

மருத்துவர் வி.சாந்தா, நடிகர் ரஜினிகாந்த், மறைந்த தொழிலதிபர் தீருபாய் அம்பானி, வாழும் கலை அமைப் பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஊடக தொழிலதிபர் ராமோஜி ராவ் ஆகியோ ருக்கு மத்திய அரசு பத்மவிபூஷண் விருது அறிவித் துள்ளது.
நடப்பாண்டு 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக் கப்பட்டு ள்ளன. இதில், 10 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 83 பேருக்கு பத்ம ஸ்ரீ அறிவிக் கப்பட்டு ள்ளது.

112 பேரில் 19 பேர் பெண்கள், 10 வெளிநாட்டவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், மறைவு க்குப் பிறகு 4 பேருக்கு விருதுகள் அறிவிக் கப்பட்டு ள்ளன. இந்தியா வில் குடிமக் களுக்கு வழங்கப் படும்

இரண்டா வது மிகப் பெரிய விருது பத்ம விபூஷண். ஏற்கெ னவே பத்ம பூஷண் விருது பெற்றுள்ள நடிகர் ரஜினி காந்துக்கு நடப்பாண்டு பத்ம விபூஷண் அறிவிக்கப் பட்டுள்ளது.

ரிலை யன்ஸ் சாம்ராஜ் யத்தை நிறுவிய மறைந்த தொழிலதிபர் தீருபாய் அம்பானி, வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஊடக தொழிலதிபர் ராமோஜி ராவ் ஆகியோரு க்கும் பத்ம விபூஷண் அறிவி க்கப்பட் டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், டிஆர்டிஏ முன்னாள் தலைவர் வி.கே. ஆத்ரே, அடையாறு புற்றுநோய் ஆய்வு மைய தலைவர் டாக்டர் வி. சாந்தா, பரத நாட்டியம்,

குச்சிப்புடி கலைஞர் யாமினி கிருஷ்ண மூர்த்தி, கர்நாடக சங்கீத வாய் பாட்டுக் கலைஞர் கிரிஜா தேவி, அமெரிக்க வாழ் இந்திய பொருளாதார நிபுணர் அவினாஷ் தீட்சித் ஆகியோ ருக்கும் பத்ம விபூஷண் அறிவிக் கப்பட் டுள்ளது.

19 பேருக்கு பத்மபூஷண்

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங் கனை சாய்னா நெவால், மறைந்த ஆன்மிக தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி தேஜோம யானந்தா, இந்தியாவு க்கான அமெரிக்க முன்னாள் தூதர் ராபர்ட் பிளாக்வில், தொழிலதிபர் பலோன்ஜி சாபூர்ஜி மிஸ்ட்ரி,
மாருதி சுசூகி தலைவர் ரவீந்திர சந்திர பார்கவா, கட்டிடக்கலை வல்லுநர் ஹபீஸ் கான்ட்ராக்டர், பென்னட் கோல்மோன் அன்கோ தலைவர் இந்து ஜெயின், முன்னாள் மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி வினோத் ராய்,

இந்தி நடிகர் அனுபம் கெர், பாடகர் உதித் நாரயண், சிற்பி ராம் வி. சுடர், மணிப்புரி நாடக கலைஞர் ஹேய்ஸ்னம் கன்ஹய்லால், இந்தி, தெலுங்கு எழுத்தாளர் யர்லகட்டா லட்சுமி பிரசாத், சமஸ்கிருத அறிஞர் என்.எஸ். ராமானுஜ தட்டாச் சார்யா, 

பஞ்சாப் செய்தி யாளர் பர்ஜிந்தர் சிங் ஹம்தார்ட், இரைப்பை குடல் மருத்துவர் டி. நாகேஷ்வர் ரெட்டி, விஞ்ஞானி ஏ.வி. ராமா ராவ் ஆகியோ ருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக் கப்பட் டுள்ளது.

பத்மஸ்ரீ

விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை, மும்பை தாக்குதல் வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், இந்தி திரை பிரபலங்கள் அஜய் தேவ்கன், பிரியங்கா சோப்ரா, மறைந்த நடிகர் சயீத் ஜெப்ரி, மாஸ்டர்கார்டு தலைமைச் செயல் அதிகாரி அஜய்பால் சிங் பங்கா,

வில்வித்தை வீராங் கனை தீபிகா குமாரி, பரதநாட்டிய கலைஞர் பிரதிபா பிரகலாத், குஜராத் நாட்டுப் புற இசைக் கலைஞர் பிகுடன் காத்வி, கோவா இசைக் கலைஞர் துளசிதாஸ் பார்கர், விஞ்ஞானி ஓங்கார் நாத் ஸ்ரீவஸ்தவா, திரைப்பட இயக்குநர் ராஜமவுலி, போஜ்புரி பாடகர் மாலினி அவஸ்தி, 

யோகா குருக்கள் பிரெட்ரக் கே. நிகிக் (சைபீ ரியா), ஹுய் லான் ஜாங் (சீனா) ஸ்ரீபாஸ் சந்திர சுபாகர், கர்நாடக இசை வாய்ப் பாட்டு கலைஞர் சோமா கோஷ், திரைப்பட இயக்குநர் நிலா மதாப் பாண்டா, இயக்குநர் மதுர் பந்தர்கர், கர்நாடக நாட்டுப்புற கலைஞர் வெங்கடேஷ் குமார்,
ராஜஸ்தான் நாட்டுப்பு ற நடனக் கலைஞர் குலாபி சபேரா, சத்தீஸ்கர் நாட்டுப்புற இசைக் கலைஞர் மம்தா சந்திராகர், நுண் ஓவியர் ஜெய் பிரகாஷ் லேகிவால், தெலங்கானா ஓவியர் லக்ஸ்மா கவுட், மத்தியப் பிரதேச புகைப்பட கலைஞர் பாலச்சந்திர தத்தாத்ரே மோந்தே,
அந்தமான் நிகோபர் தீவுகள் நிகழ்த்துக் கலைஞர் நரேஷ் சந்தர், கல்வி மற்றும் இலக்கிய பிரிவில் அசாமின் தீரேந்திர நாத் பெஸ்பரூவா, பிரஹலாத் சந்திர டாசா, காமேஸ்வரம் பிரம்மா டெல்லி யின் ரவீந்தர நாகர், புஷ்பேஷ் பண்ட், அசோக் மாலிக், குஜராத்தின் தயாபாய் சாஸ்திரி,

கர்நாடகத்தின் சந்தேஷ் சிவார பியாரப்பா, ஒடிஷாவின் ஹல்தார் நாக், ஜம்மு - காஷ்மீரின் ஜவாஹர் லால் கால், மருத்துவத் துறையில் தெலங்கா னாவின் மன்னம் கோபி சந்த், டெல்லியின் பிரவீண் சந்திரா, 

தமிழகத் தின் சந்திரசேகர் சேஷாத்ரி, டெல்லியின் அனில் குமாரி மல்ஹோத்ரா, எம்.வி. பத்மா ஸ்ரீவஸ்தவா, குஜராத் தின் சுதிர் வி.ஷா உள்ளிட் டோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக் கப்பட் டுள்ளது.

தமிழகம்

தமிழகத் தில் நடிகர் ரஜினிகாந்த், அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் சாந்தா ஆகியோ ருக்கு பத்ம விபூஷண் விருதும், டாக்டர் சந்திரசேகர் சேஷாத் ரிக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக் கப்பட்டு ள்ளது.
மேலும், தமிழக த்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் தாமல் கண்டலை (சமூக சேவை), அருணாச் சலம் முருகானந்தம் (சமூக சேவை) ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவி க்கப்பட் டுள்ளது.
வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை ஆகியோர் தமிழக த்தைச் சேர்ந்தவர்கள் எனினும், அவர் கர்நாடக மாநிலத்தவர் என விருதுப் பட்டியலில் குறிப் பிடப்பட் டுள்ளது.

மார்ச் அல்லது ஏப்ரலில் குடியரசுத் தலைவர் மாளி கையில் நடைபெறும் விழாவில் இவ்விரு துகளை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கு வார்.
Tags:
Privacy and cookie settings