தமிழ் புத்தாண்டு போட்டிக் களத்தில் 'தெறி' Vs '24' | Tamil New Year in the battle field 'South' Vs '24' !

1 minute read
விஜய் நடிக்கும் 'தெறி' மற்றும் சூர்யா நடிக்கும் '24' ஆகிய படங்கள் தமிழ் புத்தாண்டு வெளி யீடாக வெளியாக இருக்கிறது. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தி ருக்கும் படம் 'தெறி'.
ஜி.வி.பிரகாஷ் இசைய மைத்து வரும் இப்படத்து க்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திரு க்கிறார். தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப் பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

விரைவில் டீஸர் வெளியிட படக்குழு திட்ட மிட்டு இருக்கிறது. மேலும், ஏப்ரல் 14 வெளியீடாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '24'. ஏ.ஆர். ரஹ்மான் இசை யமைத்து வருகிறார். 2டி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. 

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத் திடம் இருந்து மொத்த வெளியீட்டு உரிமை யையும் ஈராஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படத் தின் படப்பிடிப்பு நீண்ட நாட்க ளுக்கு முன்பே முடிவுற்று, இறுதி கட்டப் பணிகள் தீவிரப் படுத்தப் பட்டு இருக்கிறது. 

3 வேடங்களில் சூர்யா நடித்தி ருப்பதால் இப்படத் துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என ஈராஸ் நிறுவனம் அறிவித்தி ருக்கிறது. 

ஒரே நாளில் விஜய் மற்றும் சூர்யா படங்கள் வெளி யானால், படத்தின் வசூல் பிரியும் என்பதால் நல்லதல்ல என்று விநியோ கஸ்தர்கள் கருத்து தெரிவித்து வருகி றார்கள்.
Tags:
Today | 6, April 2025
Privacy and cookie settings