தூத்துக்குடியில் திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின !

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகள் மற்றும் அணு உலை இருக்கும் இடிந்தகரை பகுதிகளில் 50 முதல் 300 எண்ணிக்கை யிலான திமிங்கி லங்கள் கரை ஒதுங்கியி ருக்கின்றன. 
அவற்றில் பெரும்பாலான திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கிடப்பதாகக் கூறப்படுகிறது.  நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இருப்பது பேரிடரின் அறிகுறியா? அல்லது அணு உலை பாதிப்பா? அல்லது 
வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியாமல் மீன்வளத்துறையினரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings