தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் புதிய மொபைல் அப்ளி கேஷன் ஒன்றை கண்டு பிடித்து ள்ளனர். குழந்தை ஏன் அழுகிறது? என்பதை கண்டுபிடித்து சொல்லி விடும் .
இந்த மொபைல் 'ஆப்' இரண்டு ஆண்டுகள் உழைப்பில் உருவா கியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தை களின் அழுகையை இந்த மொபைல் 'ஆப்' பதிவு தன்னகத்தே பதிவு செய்து வைத்து ள்ளது.
பல்வேறு சந்தர்ப்ப ங்களில் அக்குழந் தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை 2 லட்சத் திற்கும் அதிகமான விதவிதமான அழுகை களை சேகரித்து இருக்கிறார்கள்.
அவற்றின் அடிப்படை யில், இந்த 'ஆப்' குழந்தை ஏன் அழுகிறது? என்பதை தீர்மானிக்கிறது.
இரண்டு வயதுக்குட் பட்ட குழந்தைகளின் அழுகைக் கான காரணத்தை சரியாக சொல்லி விடும் இந்த 'ஆப்' 92 சதவீதம் வரை துல்லிய மாக உள்ளது.
The Infant Cries Translator என்ற இந்த 'ஆப்' ஆப்பிள், ஆன்ட்ராய்டு கருவி களுக்கு வெளியிடப் பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் ரூ.200-க்கு கிடைக்கிறது.