ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த மாதம் 19-ந் தேதி இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகருக்கு சென்றது. இந்த விமானத்தில் ஜினு ஆபிரகாம் (வயது 39) என்பவர் தனது 10 வயது மகனுடன் பயணம் செய்தார்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ஜினு ஆபிரகாம் திடீரென எழுந்து நின்று விமானத்தின் மையப்பகுதியில் சிறுநீர் கழித்தார்.
இதனை கண்டதும் சக பயணிகளும், விமான ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பிடித்து விசாரித்த போது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து விமான ஊழியர்கள் அவரது கைகளை கட்டி இருக்கையில் அமர வைத்தனர். விமானம் பிர்மிங்காமில் தரையிறங்கியதும் போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு பிர்மிங்காம் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 1,000 பவுண்டு (சுமார் ரூ.1 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.