ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு அப்பீல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மேல்முறை யீட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இறுதி வாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. கர்நாடக அரசு சார்பில் துஷ்யந்த் தவே 2–வது நாளாக நேற்று இறுதி வாதம் செய்தார்.
நீதிபதி குமாரசாமி யின் தீர்ப்பை ரத்து செய்து விட்டு வழக்கின் சாட்சி யங்கள், அரசு சான்று ஆவண ங்களை ஆராய்ந்து நீதிபதி குன்ஹா வின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
இந்த வழக்கு இன்று விசார ணைக்கு வந்தது. வழக்கு தொடர் பான ஆவணங் களை அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர்.
அதோடு வழக்கு விசார ணையை வருகிற 10–ந் தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தர விட்டனர். அன்று கர்நாடக அரசு வக்கீலின் இறுதி வாதம் நடைபெறும் என்றும் அறிவித்தனர்.
Tags: