கும்பகோணம் மகாமக விழாவை முன்னிட்டு நாளை முதல் 10 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்று கலெக்டர் சுப்பையன் கூறி உள்ளார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவில்கள் நகரமான கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக விழா நாளை (சனிக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு அரசு கலை பண்பாட்டுத் துறை, தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நாளை முதல் வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றன.
தாராசுரம் மார்க்கெட் எதிர்புறம், மூர்த்தி கலையரங்க வளாகம், அரசு பொருட்காட்சித்திடல், நகர பஸ்நிலையம் எதிர்புறம், மயிலாடுதுறை சந்திப்பு, போலீஸ் குடியிருப்புத் திடல்
ஆகிய 5 இடங்களில் நாளை முதல் வருகிற 19-ந்தேதி வரை நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.
ஆகிய 5 இடங்களில் நாளை முதல் வருகிற 19-ந்தேதி வரை நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.
இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநில கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.
கும்பகோணம் மகாமகக் கலையரங்கில் 10 நாட்களும் நாள் தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 2 கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆதிகும்ப«ஸ்வரர் கோவில் உள்ளிட்ட 3 கோவில்களில் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் சஜீத், கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் குணசேகரன், சுற்றுலா அலுவலர் ராஜசேகர் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்து வருகிறார்கள்
கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் அனைவரும் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.