ஒபாமா தம்பதியுடன் நடனமாடிய அமெரிக்காவை சேர்ந்த 106 வயது மூதாட்டி மகிழ்ச்சி அடைந்தார்.
அமெரிக்காவை வடிவமைத்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி மாதம் கருப்பின வரலாற்று மாதமாக அமெரிக்காவில் கடைப்பிடிக்கப் படுகிறது.
இதையொட்டி தெற்கு கரோலினாவை சேர்ந்த 106 வயது கருப்பின மூதாட்டியான விர்ஜினியா மெக்லாரின், ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
பின்னர் ஒபாமா தம்பதியை சந்தித்ததும் அவரால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.
‘அமெரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதியை சந்தித்து விட்டேன்’ எனக்கூறி உற்சாகமடைந்த அவர், ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சிலியின் கைகளை பிடித்துக் கொண்டு நடனமே ஆடினார்.