இந்தியாவின் 29 அரசு வங்கிகளில் வாராக் கடன் என்று அறிவிக்கப்பட்ட தொகை ரூ. 1.14 லட்சம் கோடி என்று தெரிய வந்துள்ளது.
ரூ. 15,551 என்ற அளவிலிருந்து இது குட்டி போட்டு குட்டி போட்டு பெரும் தொகையாக விஸ்வரூபம் எடுத்து விட்டது.
இந்தத் தொகை முழுவதையும் வாங்கி விட்டு ஸ்வாஹாக செய்து கோவிந்தா பாடியுள்ளவர்கள் பெரும் பெரும் தொழிலதிபர்கள் ஆவர்.
தொழிலதிபர் களிடமிருந்து இதை வசூலிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கிக் கிடக்கின்றனவாம் இந்திய வங்கிகள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆர்டிஐ மூலம், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து சேகரித்த தகவலில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags: