வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களிடம் வரும் 22-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறுகிறது. 27-ம் தேதி வரை இந்த நேர்காணல் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாலர் அன்பழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை திமுக தலைவர் கருணாநிதி 22-2-2016, திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை,
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.
குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர் மட்டும் வரவேண்டும். மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை.
வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர் களையோ - பரிந்துரை யாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் விவர அட்டவணை: