சினிமா படம் தயாரிக்க ரூ.7 கோடி கொள்ளையடித்த தமிழக வாலிபர் | Robbery of Rs 7 crore Indian youth making the movie theater !

ருவாருர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). இவர் சினிமா படம் தயாரிக்கும் ஆசையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக பல தடவை கைதாகி ஜெயிலுக்கு சென்றார்.
அப்போது ஜெயிலில் உள்ள மற்ற திருட்டு கைதிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் ஆலோசனைப்படி வங்கிகளில் கொள்ளையடிக்க முடிவு செய்தான். 

2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் 16–ந் தேதி ஆந்திர மாநிலம் வரதைய பாளையத்தில் சப்தகிரி கிராமிய வங்கியில் கொள்ளையடித்தான். அதன்பிறகு ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வங்கிகளில் ரூ.7 கோடி வரை கொள்ளையடித்தான்.

அதன் மூலம் ‘மனசா வினவே’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்தான். கொள்ளை சம்பவத்தில் அவனை போலீசார் தேடியதால் பெங்களூருக்கு தப்பி சென்று தலைமறைவானான். 

இந்த நிலையில் பெங்களூரில் பதுங்கி இருந்த அவனை நேற்று போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 99½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. 

கைதான பாலமுருகன் மீது தமிழகத்தில் 30 திருட்டு வழக்குகளும், கர்நாடகாவில் 80 வழக்குகளும் உள்ளன. ஆந்திராவிலும் பல வழக்குகள் உள்ளன.
Tags:
Privacy and cookie settings