முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கோரி, முதலமைச்சரிடம் மனு அளிக்கப் போவதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம் பேட்டையில், தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், மற்றும் பெப்சி சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய நாசர், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும், பேரறிவாளன், நளினி, உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை கோரி, திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் விரைவில் பேரணி நடத்தப் போவதாகத் தெரிவித்தார்.
பேரணியின் முடிவில் விடுதலையை வலியுறுத்தி முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப் போவதாகவும் அறிவித்தார்.