பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் 800 கோடி... விஜய் மல்லையா !

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவை கடன் ஏய்ப்பாளராக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. மல்லையா விடமிருந்து 800 கோடி வசூலாகாத நிலையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் 800 கோடி... விஜய் மல்லையா !
பாரத ஸ்டேட் வங்கி, யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் ஏற்கனவே விஜய் மல்லையாவை கடன் ஏய்ப்பாளராக அறிவித்துள்ளன. 

இதற்கிடையில் மல்லையா தான் வாங்கிய கடனுக்கு பிணையாக வைத்த மும்பை கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை வரும் மார்ச் 14ம் தேதி பாரத ஸ்டேட் வங்கி ஏலம் விட உள்ளது.

இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு 6 ஆயிரத்து 963 கோடி ரூபாய் கடனில் ஒரு பகுதியை அவ்வங்கி நேர் செய்ய உள்ளது.
Tags:
Privacy and cookie settings