தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி யுள்ளது. திமுக, தேமுதிக கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணலை இன்று 2வது நாளாக நடத்துகிறது.
கூட்டணி குழப்பங்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில் கூட்டணி குறித்தோ தேர்தல் பிரசாரம் குறித்தோ வேட்பாளர்கள் குறித்தோ எதையும் கவலைப் படாமலம் அமைதியாக காய் நகர்த்தி வரும் அதிமுக..
இறுதியில் என்ன செய்யப் போகிறது எனற எதிர்பார்ப்பை பல தரப்பிலும் ஏற்படுத்தி யுள்ளது. உதிரிக்கட்சிகள் முதல் எதிர்கட்சிகள் வரை அனைத்தும் ஆளாளுக்கு கூட்டணிக்கும்,
இறுதியில் என்ன செய்யப் போகிறது எனற எதிர்பார்ப்பை பல தரப்பிலும் ஏற்படுத்தி யுள்ளது. உதிரிக்கட்சிகள் முதல் எதிர்கட்சிகள் வரை அனைத்தும் ஆளாளுக்கு கூட்டணிக்கும்,
சீட்டுகளுக்கும் அடித்துக் கொண்டு வரும் நிலையில் சத்தம் இல்லாமல் அனைத்தையையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அதிமுகவின் திட்டம் தான் என்ன
என்ற கேள்வியும் நிலவுகின்ற போது தான் தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுக்க பேச்சு வார்த்தை நடத்தி வரும் பாஜகவினர் ஏதேதோ மந்திரச் சொற்களை வீசி வருகிறார்களாம்.
மாறி மாறி திமுக, அதிமுக கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி அமைத்தால் அவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். நீங்கள் எப்போது ஆட்சிக்கு வரப்போகி றீர்கள்.
இப்போது இல்லா விட்டாலும் அடுத்தடுத்த தேர்தல்களிலாவது தேமுதிக ஆளும் பொறுப்புக்கு வர வேண்டுமானால், இந்தத் தேர்தலில் திமுக வுடன் அறவே சேரக் கூடாது என்கின்றனராம்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் எழுப்பிய முழக்கங்களைப் பார்க்கும் போது பாஜக வினரின் மந்திரச் சொற்கள் வேலை செய்யத் தொடங்கி விட்டனவோ என எண்ணத் தோன்றுகிறது.
நான் கிங் மேக்கராக இருப்பதை விட, கிங் ஆக இருக்க வேண்டும் என்றது திமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாக கூறப்படுகிறது.
நான் கிங் மேக்கராக இருப்பதை விட, கிங் ஆக இருக்க வேண்டும் என்றது திமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஒரு வேளை பாஜகவினரின் மந்திரச் சொற்களில் மயங்கி பாஜக பக்கம் கேப்டன் சாய்ந்தாலோ அல்லது
மக்கள் நலக் கூட்டணியுடன் அவர் கரம் கோர்த்தாலோ அது ஜெயலலிதாவின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படும்.
எப்படி என்கிறீர்களா.. கடந்த மக்களவைத் தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் எல்லாம் பல திசைகளில் சிதறின. இதனால் தான் அதிமுகவால் 37 இடங்களில் வெல்ல முடிந்தது.
அது போலவே வரும் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் பல அணிகளாக பிரிந்து நின்றால் ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறி மீண்டும் வெற்றி பெற்று விடலாம் என்பது அதிமுகவின் கணக்கு.
குறிப்பாக திமுக அணியில் தேமுதிக இடம் பெறவே கூடாது என அதிமுகவினர் எதிர் பார்க்கின்றனர்.
குறிப்பாக திமுக அணியில் தேமுதிக இடம் பெறவே கூடாது என அதிமுகவினர் எதிர் பார்க்கின்றனர்.
இதன் காரணமாக தாங்கள் யாருடன் கூட்டணி சேர வேண்டும் என்பதை விட, திமுகவுடன் யாரை யெல்லாம் அணி சேர விடக்கூடாது என்பதில் தான் முதல்வர் ஜெயலலிதா தற்போது தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.