விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சரண்யாவின் தந்தை ஏழுமலை தாக்கல் செய்த மனுவில், எனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. எனவே, மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையில் நான் விரும்பும் மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் கே. அக்னி ஹோத்ரியும், எம்.வேணு கோபாலும் மறு பிரேத பரிசோதனைக்கு அனுமதி அளித்து உத்தர விட்டனர்.
முன்னதாக கடந்த செவ்வாய்க் கிழமையன்று, நீதிபதி ஆர்.மாலா முன்பு இம்மனு விசார ணைக்கு வந்தது.
மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதி அளித்த உத்தரவில், மோனிஷாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய
உயர் நீதிமன்றம் உத்தர விட்டது என்பதற்காக, சரண்யாவின் உடலையும் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தர விட முடியாது.
மேலும் உடல் புதைக்கப்பட்டு 9 நாட்கள் கழித்து இந்த மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது என உத்தர விட்டார்.
தனி நீதிபதி அமர்வு உத்தரவை எதிர்த்து சரண்யாவின் தந்தை ஏழுமலை டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தார்.
ஏழுமலை யில் மேல்முறை யீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி ஹோத்ரியும், எம்.வேணு கோபால், சரண்யா வின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்து உத்தர விட்டனர்.