மும்பையில் தங்கியிருந்தபோது பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் சகோதரர் ராகுல் பட்டை சந்தித்து பழகியதாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் கைதான அவர் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் வழக்கு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். இன்று அவர் 4வது நாளாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
நான் மும்பையில் தங்கியிருந்தபோது விமான நிலையத்தையும் உளவு பார்த்தேன். இது குறித்து மேஜர் இக்பாலிடம் தெரிவித்தபோது இது மோசமான யோசனை என்றார்.
மும்பை விமான நிலையத்தை தாக்க மேஜர் இக்பால் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அந்த இடத்தை தாக்காமல் விடுவதால் லஷ்கர் இ தொய்பா தலைவர்கள் வருத்தம் அடைந்தனர்.
2008ம் ஆண்டு மே மாதம் நான் பிலடெல்பியா மற்றும் நியூயார்க்கிற்கு சென்றேன். 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பாகிஸ்தானில் தங்கிவிட்டு அமெரிக்கா சென்றேன்.
அமெரிக்காவில் நான் ராணாவுடன் பேசினேன். அப்போது அவரிடம் நான் மும்பை சென்று வந்தது பற்றி தெரிவித்தேன். நான் மும்பை விமான நிலையத்தை உளவு பார்த்தும் அந்த இடத்தை லஷ்கர் இ தொய்பா தேர்வு செய்யவில்லை.
ராகுல் பட்டை விலாஸ் என்பவர் மூலம் சந்தித்து பழகினேன். (ராகுல் பட் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகன்,
ஆலியா பட்டின் சகோதரர்). பாடி பில்டிங் போட்டியின்போது ராகுலை சந்தித்தேன். மும்பையில் உள்ள மோக்ஷ் ஜிம்மின் பொறுப்பாளர் விலாஸ்.(ஆலியா, ராகுலின் தந்தை ஒன்று ஆனால் தாய் வேறு).
ஆலியா பட்டின் சகோதரர்). பாடி பில்டிங் போட்டியின்போது ராகுலை சந்தித்தேன். மும்பையில் உள்ள மோக்ஷ் ஜிம்மின் பொறுப்பாளர் விலாஸ்.(ஆலியா, ராகுலின் தந்தை ஒன்று ஆனால் தாய் வேறு).
மும்பையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அன்று தென் மும்பை பக்கம் செல்ல வேண்டாம் என ஹெட்லி ராகுலை எச்சரித்ததாக முன்பு செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.