பட்ஜெட் எப்படி இருந்தாலும் உங்கள் பர்ஸை காப்பாற்றலாம் !

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி 23 -ம் தேதி தொடங்கவுள்ளது. எந்தெந்த பொருட்களின் விலை உயரப் போகிறது, எவற்றின் விலைகள் குறையப் போகின்றன...?
பட்ஜெட் எப்படி இருந்தாலும் உங்கள் பர்ஸை காப்பாற்றலாம் !
 வரி விதிப்பு எப்படி இருக்க போகிறது....? கால மாற்றத்தில் அத்தியாவசிய பொருட்களாகிப்போன கைபேசி, கணிணி ஆகியவற்றின் விலை கூடுமா...குறையுமா...? 

என விவாதிக்க, இங்கு மெத்தப் படித்த ஒரு பெருங்கூட்டம், தடிமனான புத்தகங்களை படித்து தயாராகிக் கொண்டிருக்கிறது.

அவர்கள் இந்த பட்ஜெட்டின் நிறை, குறைகளை அலசுவார்கள். ஆனால், இந்தக் கட்டுரை இந்த பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும், மக்களின் எதிர்பார்ப்பு என்னென்ன என்பது குறித்ததல்ல. 

பொதுவாக நம்முடைய பொருளாதாரம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை குறித்து காந்தியும், குமரப்பாவும் விரும்பிய நம் தேசத்தின் வளர்ச்சி குறித்து...

பட்ஜெட் தாக்கல் ஆவதற்கு முன்பே ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். 

ஜெட்லி தாக்கல் செய்யப் போகும் பட்ஜெட், காந்தியின் ஆன்மாவை மகிழ்விக்காது என்று. தேசத்தை பல தசாப்தங்கள் ஆட்சி செய்த, 

காந்தி தலைமை வகித்த காங்கிரஸே அவர் விரும்பிய பட்ஜெட்டை இத்தனை காலமாக தாக்கல் செய்யாத போது, நாம் ஜெட்லியிடம் அதை எதிர் பார்ப்பது பேராசை அன்றி வேறல்ல...? 

அதிகார பரவலை மட்டும் காந்தி விரும்பவில்லை, பொருளாதார பரவலையே விரும்பினார்.
பட்ஜெட் எப்படி இருந்தாலும் உங்கள் பர்ஸை காப்பாற்றலாம் !
நீடித்த வளர்ச்சிக்கும், உண்மையான ஜனநாயகத்திற்கும் மையப் படுத்தப்படாத பொருளாதாரமே சிறந்தது என்று முன்மொழிந்து விட்டுச் சென்றார். 

ஆனால், நாம் காந்தியுடன் அவருடைய அனைத்துக் கொள்கைகளையும் புதைத்து விட்டோம். 

இப்போது காணப்படும் பல பிரச்னைகள், இங்கு பிரச்னைகள் என்று நான் குறிப்பிடுவது இவர்கள் சொல்லும் GDP கணக்கு, 

தேசத்தின் வளர்ச்சி என்று 'மேதைகள்' நம்மை எண்களால் குழப்பம் பிரச்னைகள் குறித்து மட்டுமல்ல. நான் குறிப்பிடுவது தனி மனித பிரச்னையையும் சேர்த்துத் தான். 

உங்கள் குழந்தையுடன் நீங்கள் நேரம் செலவிடாததால், அந்த பிஞ்சு மனதில் ஏற்படும் உளவியல் சிக்கல், வயது முதிர்ந்த பெற்றோரை சொந்த ஊரில் தனியாக தவிக்க விட்டு, 
நகரத்தில் பணத்திற்கு பின் ஓடும் இளைஞர்களின் பிரச்னை, ஒரே வீட்டில் இருந்தாலும் கணவனும், மனைவியும் சந்தித்து பல நாட்கள் ஆகிய 

அனைத்து தம்பதிகளின் பிரச்னை. இவை எல்லா வற்றுக்குமான தீர்வு வேண்டுமானால், செல் அரித்த காந்திய பொருளாதார கொள்கையை தூசு தட்ட வேண்டும்.

மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தின் சிக்கல்:

மையப் படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் செல்வம் ஒரு சிலரிடம் குவிகிறது. அது சமூகத்தில் பல ஏற்ற தாழ்வுகளை உண்டாக்குகிறது. 

இதற்கு எதிராக தான் காந்தி இருந்தார். ஆனால், இப்போது அந்த பொருளாதார முறையைத் தான் நாம் தழுவி உள்ளோம். காந்திய பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பா சொல்கிறார். 

மையப் படுத்தப்பட்ட உற்பத்தியில் உழைப்பாளர் எண்ணிக்கை குறைவு. அதாவது சில இயந்திரங்களை கொண்டே பெரும் உற்பத்தியை செய்து விட முடியும்.
பட்ஜெட் எப்படி இருந்தாலும் உங்கள் பர்ஸை காப்பாற்றலாம் !
அதாவது தொழிலாளர் குறைவு, உற்பத்தி அதிகம். இதனால் பொருட்கள் குவிந்து, வாங்கும் திறன் குறைந்து சமூக சமநிலை பாதிக்கப் படுகிறது.

மையப் படுத்துதல் என்பது அனைவரையும் நம் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கும் அடக்கு முறையின் ஒரு வடிவமே. 

பெரிய தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான உழைப்பாளிகளின் வாழ்வைத் தன் கைக்குள் வைத்துள்ளன . 

நாட்டில் ஜனநாயகம் வேண்டுமானால் பொருளா தாரத்திலும் ஜனநாயக தன்மை வேண்டும் என்று. அவரே தீர்வையும் முன் வைக்கிறார். 

அது பரவல் பொருளாதாரம். பரவல் உற்பத்தி. அதாவது கிராம தொழில்களை மீட்டெடுப்பது. அந்தந்தப் பகுதிக்கு என்ன தேவையோ, அதை அங்கேயே உற்பத்தி செய்து கொள்வது. 

இது உற்பத்திக்கும், சந்தைக்குமான இடைவெளியைக் குறைக்கிறது என்கிறார் குமரப்பா.
இந்த பொருளாதார முறையினால், பொருட்கள் தேவையற்று பயணமாவது தவிர்க்கப் படுகிறது. பெட்ரோல், டீசல் மிச்சம் ஆகிறது.

நுகர்வை குறை, மகிழ்வை கூட்டு:

இதுவெல்லாம் புரிகிறது, இது எப்படி நவீன காலத்திற்கு பொருந்தும். காரையும், கைபேசியையும் பரவல் உற்பத்தி முறையில் உற்பத்தி செய்ய முடியுமா....? 

பக்கங்களை நிரப்புவதற்காக எழுதாதீர்கள். இது தானே உங்கள் கருத்து. நிச்சயம் முடியாது. காரையும், கணிணியையும் இதில் நாம் உற்பத்தி செய்ய முடியாது.

ஆனால், இதன் தேவைகளை நாம் குறைத்துக் கொள்ள முடியும். தேவையற்ற அனைத்து பொருட்களையும் குறைத்து கொள்வதும், காந்திய பொருளாதாரம் தான். 

நாம் நம் நுகர்வை குறைத்துக் கொள்ளும் போது, உற்பத்தி குறைகிறது. அதனால், இயற்கை அதிகம் சுரண்டப்படுவது தவிர்க்கப் படுகிறது.
பட்ஜெட் எப்படி இருந்தாலும் உங்கள் பர்ஸை காப்பாற்றலாம் !
தேவையற்ற செலவுகள் குறையும் போது, உங்கள் கடன் குறைகிறது, சேமிப்பு அதிகரிக்கிறது. 

சேமிப்பு அதிகரிக்கும் போது, நீங்கள் பணத்திற்கு பின்னால் ஓடுவது குறையும், நீங்கள் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் அதிகமாகும். 

உங்கள் பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் உள்ள இணக்கம் அதிகரிக்கும். இதற்கெல்லாம் மேலாக, நீங்கள் தேவையில்லாமல் ஆடை எடுப்பதை குறைத்துக் கொள்ளும் போது, சாயம் கலக்கும் ஒரு ஆறு மீட்கப் படுகிறது. 

நீங்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, உங்கள் குழந்தைகளுக்குத் தூய்மையான காற்றை மிச்சம் வைக்கிறீர்கள். 

நீங்கள் கைப்பேசி எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளும் போது, காங்கோ தேசம் காக்கப் படுகிறது. (கைப்பேசி தயாரிக்க தேவையான கோல்டான் அதிக அளவில் அந்த தேசத்தில்தான் எடுக்கப்படுகிறது.)

நிச்சயம் நம் அரசு, இந்த பொருளாதார முறையை முன்னெடுக்காது. நாம்தான் மாற்றத்தை, நம்மிலிருந்தே தொடங்க வேண்டும். நுகர்தல் குறைதல் அதன் தொடக்கமாக இருக்க வேண்டும்.
எனக்கு பிடித்தமான, ஆல்பர்ட் என்ஸ்டீனின் மேற்கோள் இருக்கிறது, பிரச்னைகளுக்கான தீர்வு எளிதாக இருக்கிற போது, கடவுள் தீர்வை சொல்கிறார் என்ற பொருளை தரும் மேற்கோள் அது. 
 
நீங்கள் மனதில் கைவைத்து சொல்லுங்கள், இப்போது நம் பிரச்னைகள் எளியனவாகவா இருக்கின்றன...? நிச்சயம் இல்லை. அதற்கான தீர்வை நாம்தான் தேட வேண்டும்.

ஆனால், நாம் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். நம் சிக்கலுக்கான தீர்வை ஏற்கெனவே, காந்தியும், குமரப்பாவும் முன் மொழிந்து விட்டுச் சென்று விட்டார்கள்.
Tags:
Privacy and cookie settings