உடல் உறுப்புகளை அச்சடிக்கும் பயோ பிரிண்டர்!

விபத்து போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் திடீரென்று தோன்றும் ஆபத்தான நோய்கள் காரணமாக நாம் இழந்துபோகும் உடல் பாகங்களை நமக்கு மீட்டுத்தந்து,


மீண்டும் நாம் இயல்பு வாழ்க்கையை வாழ உதவும் நவீன தொழில்நுட்பம் எதுவும் இன்னும் உருவாக்கப்படவில்லை. ஆனால் அத்தகைய ஒரு இலக்கை நோக்கிய

ஆய்வுப் பயணத்தில் உருவான பயோ பிரிண்டர் மூலம் ‘அச்சடிக்கப்பட்ட’ மூளை மற்றும் சிறுநீரக திசுக்களால் இயற்கையாக இயங்கவோ அல்லது உடலுக்கான ஒரு மாற்று உறுப்பாக செயல்படவோ முடியாது.

காரணம் அவை காது, மூக்கு போன்ற வடிவம் கொண்ட ஒரு தசைக்குவியல் மட்டுமே. ஊட்டச்சத்துகளை சுமந்துவரும் ரத்த நாளங்கள், தசை மற்றும் உறுப்புகளை இயக்கும் நரம்புகளைக் கொண்ட முழுமையான உடல் உறுப்புகள் அல்ல.

உலகில் முதல் முறையாக, உயிருள்ள உயிரணுக்களை ‘மை’ போல பயன்படுத்தி, முழுமையாக இயங்கக் கூடிய, உடல் பாக அறுவை சிகிச்சை களில் பயன் படுத்திக் கொள்ள கூடிய உடல் பாகங்கள் மற்றும் திசுக்கள் ஆகியவற்றை அச்சடிக்கும் அசாத்திய திறன் கொண்ட

ஒரு முப்பரிமாண பயோ பிரிண்டரை உருவாக்கி அசத்தியிரு க்கிறார்கள் அமெரிக்கா விலுள்ள வேக் பாரஸ்ட் மீளாக்க மருத்துவ மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.

இந்த பயோ பிரிண்டர் மூலம் தனி மனித தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பிரத்யேகமான உடல் பாகங்கள் மற்றும் திசுக்களை உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் ஆய்வாளர் ஆண்டனி அடாலா.

மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்ற உடல் பாகங்கள் மற்றும் திசுக்களை பயோ பிரிண்டர் மூலம் அச்சடிக்கும் இதற்கு முந்தைய முயற்சிகள் தோல்வியையே தழுவின.


இதற்குக் காரணம், அவற்றை அச்சடிக்கும்போது உயிரணுக்களை உயிருடன் வைத்திருப்பது மற்றும் உடல் பாகங்கள் இயங்க அவசியமான பிராண வாயுவை அளிக்கும் ரத்த நாளங்கள் மற்றும் இதர ரத்த ஓட்ட அமைப்புகளை உருவாக்க முடியாததே என்கிறார் ஆய்வாளர் அடாலா.

முக்கியமாக, வெறும் 200 மைக்ரான் அல்லது 1 மில்லிமீட்டர் அளவுள்ள ரத்த நாளங்கள் இல்லாமல் உயிரணுக்களால் உயிருடன் இருக்க முடியாது என்பதால்,

உயிரியல் திசுக்கள், தசைகள் மற்றும் குருத்தெலும்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் படி வடிவமைக்கப் பட்ட பிரத்யேகமான பிளாஸ்டிக் மற்றும் ஜெல்கள் ஆகிய வற்றைக் கொண்டு அச்சடிக்கப்படும் உடல் உறுப்புகள் ஒரு மாற்று உறுப்பாக பொருத்தப்பட்ட பின்னர்,

உடலிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துகளின் உதவியுடன் புதிய திசு, எலும்பு அல்லது குருத்தெலும்பு ஆகிய வற்றை உற்பத்தி செய்துகொண்டு இயங்கத் தொடங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய பயோ பிரிண்டர் தொழில் நுட்பத்தின் மூலம் மனிதர்கள், முயல்கள், எலிகள் மற்றும் சுண்டெலிகள் ஆகியவற்றி லிருந்து சேகரிக்கப் பட்ட உயிரணுக்களைப் பயன்படுத்தி காது,


எலும்பு மற்றும் தசைகளை வெற்றிகரமாக உருவாக்கி யுள்ளனர் அடாலாவின் ஆய்வுக் குழுவினர்.

எலிகளின் உடலின் பொருத்தப்பட்ட காது மற்றும் தசை ஆகியவை இரண்டு வாரம் முதல் இரண்டு மாதங்களுக்குள் குருத்தெலும்பு மற்றும் புதிய நரம்புகளை வளர்த்துக் கொண்டு

இயற்கையாக செயல்படத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில வருடங்களில் மனிதர்களுக்குப் பயன்படும் உடல் பாகங்களை அச்சடிக்க முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் ஆய்வாளர்கள்!
Tags:
Privacy and cookie settings