என்னை அடையாளம் கண்டது தமிழ் சினிமா தான். தமிழ் ரசிகர்களும் என்னை அவர் களது பக்கத்து வீட்டுப் பெண் போலத் தான் பார்க் கிறார்கள்.
மலையாள பெண்ணான எனக்கு இது ஒரு பெரிய அங்கீகாரம் என நினைக் கிறேன்.. என்று உற்சாக த்துடன் பேசுகிறார் லட்சுமி மேனன். ‘மிருதன்’ படத்தை விளம்பரப் படுத்த சென்னை வந்திருந் தவரிடம் பேசியதில் இருந்து..
வேதாளம் படத்தில் தங்கை வேடத்தில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?
எல்லோரும் இப்படி கேட்கிறார்கள். அதை ஒரு முயற்சியாகத் தான் பண்ணி னேன். ‘வேதாளம்’ படம் பெரிய வெற்றி அடைந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
அதே போல ‘மிருதன்’ படத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஒரு புதிய முயற்சி பண்ணி யிருக்கிறோம். புதிய முயற்சியில் ஏதாவது ஒரு வகையில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச் சியைத் தருகிறது.
படத்தின் பிரதான பாத்தி ரங்கள் 7 பேர் மட்டும் தான். மற்ற எல்லோருமே.. பிணங்கள் போல பேய் படங்களில் எழுந்து நடந்து வருவார்களே, அது போன்ற ஸோம் பிக்கள்!
வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் தங்கை வேடத்தில் நடிக்கக் கேட்டால் ஒப்புக் கொள்வீர்களா?
இயக்குநர் சிவா கதையைக் கூறும் போதே, கதையில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்று சொன்னார். ‘தங்கை வேடத்தில் நடிப்பவர் களுக்கு முக்கியத்துவம் இருக்காது’ என்று சொல்பவர் களுக்காக,
முக்கிய த்துவம் இருக்கிறது என்று காட்டு வதற்காக ஒரு முறை தங்கையாக நடித்து விட்டேன். இனிமேல் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். தங்கையாக எந்த ஒரு ஹீரோவின் படத்திலும் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன்.
இயக்குநர் முத்தையாவுக்கும் உங்களுக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகிறதே. எனக்கு நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
காதலர் யாரும் இல்லை. இப்போதைக்கு தனியாகத் தான் இருக்கிறேன். எனக்கு அவர் மீது காதல் இல்லை. அவருக்கு என் மீது காதல் இருக்கிறதா என்பது தெரியாது.
முத்தை யாவின் படத்தில் நீங்கள் நடிக்காதது ஏன்?
‘மருது’ படத்தில் நாயகியாக நடிக்கக் கேட்டு இயக்குநர் முத்தையா என்னிடம் வந்து கதை யெல்லாம் சொன்னார். விஷாலும் போன் செய்தார்.
‘மிருதன்’, விஜய் சேது பதியின் படம் ஆகிய வற்றில் நடிக்க ஏற்கெனவே ஒப்புக் கொண்டிரு ந்ததால், அப்பட த்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது.
அது மட்டு மன்றி, கிராமத்து வேடத்தில் நடிப்பதற்கு ஒரு சின்ன இடைவெளி விடலாம் என்று முடிவு எடுத்திருந்ததும் ஒரு காரணம்.
பேய் படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லையா?
பேய் படம் மிகவும் பிடிக்கும் என்றாலும் கூட, பேய் படம் என்றால் எனக்கு ரொம்ப பயம். ஹாலிவுட் தவிர வேறு எதிலும் பேய் படங்கள் சரியாக இருப்பதி ல்லை என்பது என் கருத்து.
‘நிஜமாகவே பேய் இருக்கிறதோ’ என்று நம்மையே நம்ப வைத்து விடுவது போல ஹாலிவுட் படத்தில் காட்டு வார்கள். கடவுள் இருக்கிறார் என்று நம்புவது போல, பேய் இருக்கிறது என்பதையும் நம்புகிறேன்.
ஜாதி அடையாளங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பார்வதி ‘மேனன்’ கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி?
எனக்கும் ஜாதி, மதம் என்பதெல்லாம் பிடிக்காது. சின்ன வயதில் இருந்தே ‘லட்சுமி மேனன்’ என்பது எனக்கு பழக்கமாகி விட்டது.
ரசிகர்கள் மனதிலும் இந்த பெயரே பதிவாகி விட்டது. மற்றபடி, ‘உங்க பெயர் என்ன?’ என்று யாராவது என்னிடம் கேட்டால் ‘லட்சுமி’ என்று மட்டும் தான் சொல்வேன்.
உண்மையைச் சொல்லுங்கள்.. என்ன படிக்கிறீர்கள்?
பள்ளிப் படிப்பு எல்லாம் முடிந்து விட்டது. கொச்சினில் உள்ள கல்லூரியில் படித்தேன். சரியாக கல்லூரிக்கு போக முடியாததால் நிறுத்தி விட்டேன். இப்போது பல்கலைக் கழகத்தில் படிக்கிறேன்.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், படிப்பும் முக்கியம். தொடர்ந்து படிப்பேன். எழுதுவதும் ரொம்ப பிடிக்கும். நான் எழுதுவதை நானே ரொம்ப ரசிப்பேன். இப்போது எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லை.
இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள். உங்கள் படத்துக்கு டப்பிங் பண்ண லாமே..
டப்பிங் பேசுவது எனக்கும் ரொம்ப பிடிக்கும். என் படத்துக்கு நானே டப்பிங் செய்ய வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத் தான் இருக்கிறது.
ஆனால், இது இயக்குநர்களின் முடிவு. அடுத்த படத்துக்கு கண்டிப்பாக டப்பிங் பண்ணுவேன்.