காதல் திருமண ங்கள் என்றாலே த்ரில்தான். அப்படி ஒரு த்ரில் திருமணம் தான், மாதேஷ் அனிதா வுடையதும்! வலுக் கட்டாய மாக இன்னொரு வருடன்
மணமேடை வரை கொண்டு செல்லப் பட்ட தன் காதலியை, உயிரைப் பணயம் வைத்துப் போராடி தன் மனைவி யாக்கியிருக் கிறார் மாதேஷ்!
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்துள்ள ராமா புரத்தில் வசிக்கும் இந்த புதுமணத் தம்பதியை, வியப்பு கலந்த வாழ்த்து களுடன் சந்தித்தோம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்துள்ள ராமா புரத்தில் வசிக்கும் இந்த புதுமணத் தம்பதியை, வியப்பு கலந்த வாழ்த்து களுடன் சந்தித்தோம்.
நீங்க கொஞ்ச நேரத்துல சாக ப்போறீங்க; உங்க காதலிக்கு வேறொரு த்தரோட கல்யாணம் நடக்கப் போகுது… இப்படி ஒரு சூழல்ல, என்ன பண்ணுவீங்க?
என்ன தான் ஆகுது பார்த்து ருவோம்டா’னு ஒரு வீரம் வரும் பாருங்க… அந்த தைரியம் தான் இன்னிக்கு அனிதாவை எங்கிட்ட சேர்த்தி ருக்கு!
என்ன தான் ஆகுது பார்த்து ருவோம்டா’னு ஒரு வீரம் வரும் பாருங்க… அந்த தைரியம் தான் இன்னிக்கு அனிதாவை எங்கிட்ட சேர்த்தி ருக்கு!
வெட்கம் பூக்கிறது மாதேஷ் முகத்தில்.
பத்தாவது வரைக்கும் படிச்சி ருக்கேன். அப்பா, அம்மா, ரெண்டு தம்பிங்க… இதுதான் என் குடும்பம். லோன் போட்டு ஒரு சுமோ கார் வாங்கி, ஓசூர்ல ஓட்டினேன்.
கோதுமை இனிப்பு கொழுக்கட்டை
பெங்களூருல இருக்குற ஒரு கார்மென்ட் கம்பெனிக்கு வேலை யாட்களை அழைச்சி க்கிட்டுப் போற கான்ட்ராக்ட் கிடைச்சது. அப்படி ஆணும் பொண்ணுமா ஏத்திட்டுப் போன 10 பேர்ல ஒருத்தர் தான், அனிதா!”
அறிமுகம் தந்து நிறுத் தினார் மாதேஷ்.
அனிதாவு க்குப் பூர்விகம் ஆந்திரா. குடும்பத்தோட சூளகிரிக்கு பக்கத்துல இருக்குற கொரளத் தொட்டிக்கு வந்துட்டோம். ஒரு அண்ணன், ரெண்டு தங்கச்சி, நான்னு வீட்டுல மொத்தம் நாலு பசங்க.
அம்மாவுக்கும் கூலி வேல. பத்தாவதுக்கு மேல எனக்கு படிப்பு வரல. கார்மென்ட் கம்பெனி வேலை க்குப் போக ஆரம்பிச்சேன். அப்போ தான் இவரைப் பார்த்தேன்.
ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சோம். ரெண்டு பேரோட குடும்பச் சூழலையும் ஒருத்த ருக்கு ஒருத்தர் புரிஞ்சுக் கிட்டதால, கடமைகளை கொஞ்சம் முடிச்சிட்டு,
ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக் கலாம்னு முடிவெ டுத்தோம். எங்கூட வேலை பார்க்குற ஒருத்தர், இதை எங்கம்மாகிட்ட சொல்லி ட்டாங்க.
உடனே சட்டுனு கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. மாதேஷுக்கு போன் பண்ணி, எப்படியாச்சும் என்னைக் கூட்டிட்டுப் போயிடுங்க’னு அழுதேன். ஜனவரி 22-ம் தேதி பந்தல் நாள், 23-ம் தேதி சூளகிரியில கல்யாணம்.
’22-ம் தேதி ராத்திரி என் ஃப்ரெண்ட்ஸை அனுப்புறேன். அவங்க கூட வந்துடு’னு சொன்னார் மாதேஷ். கல்யாணத்துக்கு முதல் நாள் நைட், மண்டபத்துல திடீர்னு லைட் ஆஃப் ஆயிருச்சு. ஒரே சத்தம்.
வெளிய வந்து பார்த்தா, மாதேஷோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர், எங்க சொந்தக் காரங்க பிடியில இருக்காங்க.
லைட்டை ஆஃப் பண்ணிட்டு என்னைக் கூட்டிட்டுப் போக என் ரூமுக்கு வந்திட்டி ருந்ததை எங்க மாமா பார்த்துட்டார். பொண்ணைத் தூக்க வந்திரு க்காங்கனு தெரிஞ்சுபோச்சு.
ஆனா, அதை வெளிய சொல்ல முடியாதுங் கிறதால, திருடனுங்கனு சொல்லி போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துட்டாங்க. என்னையும் ரூம்ல அடைச்சு வெச்சுட்டாங்க.
மாதேஷ் வருவார்ங்கிற நம்பிக்கை எனக்கு சுத்தமா போயிருச்சு. மறுநாள் காலையில முகூர்த்த நேரத்துக்கு நான் மணமேடை க்கு வந்து ட்டேன். மாப்பி ள்ளையும் வரப் போறார்.
திடீர்னு என் எதிர்ல வந்து நிக்கு றார் மாதேஷ்! சினிமா காட்சியின் விறுவிறுப்போடு சென்றது கதை!
அப்புறம் என்ன நடந்துச்சுன்னா…
மாதேஷ் குரலில் பூரிப்பு.
நான் அனுப்பின மூணு ஃப்ரெண்ட்ஸ்ல ரெண்டு பேர் தான் மாட்டினாங்க. இன்னொ ருத்தன் போன் பண்ணி விஷய த்தைச் சொல்லி ட்டான்.
என்ன பண்றதுனு தெரியாம, இயலாமையில விடியக்கா த்தால விஷத்தைக் குடிச்சிட்டேன்.
சாகப்போற பயம் ஒரு பக்கம், என் காதலிக்குக் கல்யாணம்ங்கிற வலி ஒரு பக்கம். என்னதான் நடக்குதுனு பார்த்து டலாம்னு ஒரு தைரியம் வந்துருச்சு.
மஞ்சகொம் புல தாலி ஒண்ணு ரெடி பண்ணி பாக்கெட்ல வெச்சிக்கிட்டு, மொய் கவரோட மேடைக்குப் போனேன். என்னைப் பார்த்ததும் அதிர்ச்சி யான அனிதா ஒரே அழுகையா அழுதா.
மஞ்சகொம் புல தாலி ஒண்ணு ரெடி பண்ணி பாக்கெட்ல வெச்சிக்கிட்டு, மொய் கவரோட மேடைக்குப் போனேன். என்னைப் பார்த்ததும் அதிர்ச்சி யான அனிதா ஒரே அழுகையா அழுதா.
ஆகுறதைப் பாத்துக் கலாம்னு பாக்கெட்ல வெச்சிருந்த தாலியை எடுத்து அவ கழுத்துல போட்டுட்டேன்.
அவ சொந்தக் காரங்க எல்லோரும் சேர்ந்து என்னை வெளுத் தப்போ, அதுல ஒருத்தர் என் பாக்கெட்ல இருந்த விஷ பாட்டிலை பார்த் துட்டார்.
பையன் விஷம் குடிச்சுரு க்கான்’னு அவர் சொல்ல, அடிச்ச வங்க எல்லோரும் விலகி ட்டாங்க.
போலீஸுக்குத் தகவல் கொடுத்து, என்னை ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைக்க, அங்க நான் பொழச் சுட்டேன்! மாதேஷ் நிறுத்த…
எனக்கு முடிவாகி யிருந்த மாப்பிள்ளை, என்னைக் கல்யாணம் பண் ணிக்க முடியா துனு சொல்லி, அதே மேடையில அவரோட அத்தை பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கிட்டார்.
அப்பக்கூட எங்க வீட்டுல என்னை இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக் காம, எங்க அத்தை பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக் கலாம்னு பேசினாங்க.
அப்பக்கூட எங்க வீட்டுல என்னை இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக் காம, எங்க அத்தை பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக் கலாம்னு பேசினாங்க.
எங்க அத்தை ஒப்புக்கல. அப்புறம் கிராமத்து ஆளுங்க எங்க ரெண்டு வீட்டுலயும் பேசி கல்யாணத்தை முடிச்சு வெச்சாங்க. ஒரு வழியாக சுப க்ளைமாக்ஸ் விழுந்ததைச் சொன்னார் அனிதா!
ரெண்டு பேரும் வேற வேற ஜாதி. கல்யாண த்துக்கு அப்புறம் அனிதா வீட்டுக் காரங்க எங்கிட்ட, இந்தாப்பா எங்க கிராமத்துக் காரங்க உங்களை ஏத்துக்க மாட்டாங்க.
நீங்க எங்க வீட்டுக்கு வர முடியாது, வரவும் வேண்டியதில்ல. நல்லா யிருந்தா சரி!’னு சொல் லிட்டுப் போயிட் டாங்க. ஒரு நாள் அவங்களே தேடி வந்து எங்களை ஏத்துக்குற மாதிரி நாங்க வாழ்ந்து காட்டுவோம்!”
அனிதாவின் கைகோத்துச் சொல்கிறார் மாதேஷ்...! வாழ்வின் உத்வேகம் காதல் தானே!