அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே 2030–ம் ஆண்டில் அங்கு பொது மக்களை குடியமர்த்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட ‘நாசா’ முடிவு செய்துள்ளது. அதற்கான ஆய்வு பெருநாட்டின் தலைநகரமான லிமாவில் நடக்கிறது.
லிமாவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் உதவியுடன் அடுத்த மாதம் (மார்ச்) இந்த ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது.
செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்ப நிலை மற்றும் சுற்றுச் சூழல் அமையும் விதத்தில் மிகப்பெரிய கூண்டு அமைத்து அதில் காய்கறிகள் சாகுபடி செய்யப் படுகிறது.
தற்போது 4500 ரகங்களில் செவ்வாய் கிரகத்தில் பயிரிடுவதற்காக 100 விதமான உருளைக் கிழங்கு வகைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
இவற்றை பயிரிடுவதற்காக லிமாவில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் ஆன் டெஸ் மலைப் பகுதி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.