வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'விசாரணை' படத்தின் உரிமையை வாங்கி இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன்.
தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றி மாறன் இணைந்து தயாரித்திரு க்கிறார்கள்.
இப்படத்தின் அனைத்து உரிமை களையும் லைக்கா நிறுவனம் வாங்கி, படத்தை வெளியிட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற இப்படம் பிப்ரவரி 5 அன்று வெளியானது.
இப்படத்தைப் பார்த்த பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளையும், இயக்குநர் வெற்றி மாறனுக்கு பாராட்டு களையும் தெரிவித்த வண்ணம் இருக்கி றார்கள்.
மக்கள் மத்தியிலும் இப்படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இந்தி உரிமையை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் வாங்கியி ருக்கிறார்.
இப்படத்தில் அக்ஷய் குமார் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், பிப்ரவரி 11ம் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் 'விசாரணை' பத்திரி கையாளர் காட்சியில் அக்ஷய்குமார் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி திரையுலகின் அனுராக் கஷ்யாப் 2015ம் ஆண்டில் தனக்கு பிடித்த 10 இந்திய படங்களின் வரிசையில் 'விசாரணை' படத்தை முதல் இடத்தில் கூறியி ருந்தது குறிப்பிட த் தக்கது.