ராஜஸ்தானில் மாப்பிள்ளைக்கு பாடம் புகட்டிய மணமகள் !

ராஜஸ்தானில் வரதட்சணை கேட்ட மணமகனை, மணமகள் திருமணத்தை நிறுத்தியதோடு பொலிசிலும் பிடித்துக் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் பதேஹ்பூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும், 
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது வரதட்சணையாக மணமகன் வீட்டில் கேட்ட அனைத்தையும் தருவதாக பெண் வீட்டில் ஒப்புக் கொண்டனர். 

உடனடியாக திருமண வேலைகள் படுவேகமாக நடந்த நிலையில், பெண்ணின் தந்தையிடம் தனக்கு பைக் வேண்டாம் என்றும், கார் வாங்கி தரவேண்டும் எனவும் மணமகன் வற்புறுத்தியுள்ளார். 

மேலும் கார் வாங்கி தந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இதனை கேட்ட மணமகள் திருமணத்தை நிறுத்தினார், அத்துடன் வரதட்சணை கேட்பதாக மணமகன் மீது பொலிசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings