இனி நகை விளம்பரங்களை பார்த்து ஏமாறாதீர்கள் !

ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் ரகசியம் என்று இருக்கும், அது போலவே நகை தொழிலுக்கும் இருந்தது, ஆனால் இன்று சில நகைகடை விளம்பரங்களில், அடித்து நொறுக்கப்பட்ட சேதாரம் என்றும்,
இனி நகை விளம்பரங்களை பார்த்து ஏமாறாதீர்கள் !
எங்கள் கடையில் நகை வாங்கினால் ஆஹா மற்ற கடையில் வாங்கினால் ஸ்வாகா, எங்கள் கடையில் மட்டும் தான் நிறைய தங்கம் கொஞ்சம் செம்பு மற்ற கடையில் நிறைய செம்பு கொஞ்சம் தான் தங்கம்,

என்று பிரபலமான நடிகர் நடிகைகள் வைத்து விளம்பரம் செய்து மக்களை தன்னுடைய மாய வலைக்குள் சிக்க வைக்கின்றனர்.  

இப்படிப்பட்ட விளம்பரங்களை பார்த்து அந்த பெரிய கடையில் போய் நகைகள் வாங்கி, தன் தோழியருடன் ஏய் நேற்று நான் அந்த கடையில் இந்த நகை வாங்கினேன்டி, ஏய் இந்த கடையில் அந்த நகை வாங்கினேன்டி,
இடை, தொடை சுற்றளவு என்ன?
சேதாரம் ரொம்ப கம்மியா தர்றாங்க, என்று பெருமையாக ஏமாந்து வரும் மக்கள் அதை பெருமையாக சொல்வதை கேட்கும் போது குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளின் தரத்தை பற்றி சிந்திப்ப தில்லை.

எனவே சில உண்மைகளை உடைத்து காட்ட வேண்டிய காலக்கட்டாயம் ஏற்பட்டிருக் கிறது,

ஹால் மார்க் 916 நகைகள் என்றால் என்ன? 

 ஒரு நகையின் தயாரித்து முடித்த பிறகு அந்த நகையிலிருந்து சிறு பகுதியில் வெட்டி அதனை உருக்கி சோதனை செய்து அந்த தங்கத்தின் தரம் 91.60 எனப்படும் ஹால் மார்க் தரத்தில் இருக்கிறதா என அறிந்து,

அதன் பின்பு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முக்கோண மற்றும் 916 என்ற முத்திரையை லேசர் ஒளிக்கதிர் கொண்ட கருவியால் பதிக்கச்செய்த நகைகள் மட்டுமே உண்மையான ஹால் மார்க் நகை,
ஹால் மார்க் 916 நகைகள் என்றால்
மேலும் ஹால் மார்க் தரத்தில் ஒரு நகை தயாரிக்க வேண்டும் என்றால் ( 10 கிராம்) சொக்கத் தங்கத்தில் ( 800 மில்லி கிராம்) செம்பு மட்டுமே கலவை யாக சேர்க்க வேண்டும், 

மேலும் ஒரு நகை தயாரிக்க வேண்டும் என்றால் அதை ஒரு நகைதொழிலாளி மட்டுமே செய்து விட முடியாது, முதலில் தங்கத்தை உருக்கி, அதன் பிறகு அதை கம்பியாக்க, டை என சொல்ல படும் டிசைன் வடிவம் அமைக்க,

அதன் பிறகு அந்த மாடலுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து, பிறகு பாலிஷ் போட, கட்டிங் செய்ய, கல் வைக்க, என எல்லா வேலை களையும் முடித்து, ஹால் மார்க் முத்திரை பதித்து என ஒரு நகை செய்து முடிக்க கிட்டத்தட்ட பத்து தொழிலாள ர்களின் பட்டறை சென்று வர வேண்டியது இருக்கின்றது, 
இந்த அனைத்து வேலைகள் செய்யும் தொழிலாளிக்கும் சேதாரம் மற்றும் கூலி பகிர்ந்து கொடுக்க வேண்டும், உங்களிடம் வாங்கும் சேதாரத்தில் இவ்வளவு வேலை களையும் செய்து முடிக்க வேண்டும் என்றால்,

விளம்பரத்தில் சொல்லப்படும் 3சதவிகித அல்லது 4சதவிகித அல்லது 5சதவிகித சேதாரத்தில் செய்து விட நிச்சயமாக முடியாது, ஏன் என்றால் எந்த நகை தொழிலாளியும் கூலி சேதாரம் இல்லாமல் வேலை செய்து கொடுப்ப தில்லை,

இப்போது சிந்தித்து பாருங்கள் குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகள் உண்மையான நகையாக இருக்க முடியுமா என்றால் கிடையாது என்பது தான் உண்மை,
இனி நகை விளம்பரங்களை பார்த்து ஏமாறாதீர்கள் !
இதையும் மீறி நாங்கள் சோதனை செய்து பார்த்தோம் சரியாகத் தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பெரிய கடையில் குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கிய நகையை மீண்டும் திரும்ப கொண்டு சென்று கொடுத்து 

இந்த நகையை விற்க வேண்டும் பணம் தாருங்கள் என்று கேட்டு பாருங்கள் நிச்சயமாக பணம் தர மாட்டார்கள் இந்த நகையை தந்து வேறு நகை மட்டுமே எங்கள் நிறுவனத்தில் வாங்க முடியும் பணம் தர மாட்டோம் என்பது தான் பதிலாக வரும்,
அன்னாசி அல்வா செய்வது எப்படி?
இதுதான் அவர்கள் தொழில் தந்திரம், பெருமையாக ஏமாந்து கடையை விட்டு வெளியே வருவோம், ஞாயமான சேதாரம் கொடுத்து வாங்கும் நகைகளுக்கும், குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் சொல்கிறேன் கேளுங்கள். 

ஞாயமான சேதாரம் கொடுத்து வாங்கும் நகைகளில் உள்ள கல் மற்றும் பாசி எடை கழித்து தரப்படும், நீங்கள் வாங்கும் ஹால் மார்க் நகைகள் ஏதாவது பண தேவைகளுக் காக விற்க போகும் போது அன்றைய மார்க்கெட் விலைக்கு பணமாக தரப்படும்,

கல் நகைகளில் கல்லிற்கான பணத்தை வாங்கி கொண்டு, கல் எடையை முற்றிலும் கழித்து தரப்படும், 10 கிராம் சுத்தமான தங்கத்தில் 800 மில்லி கிராம் செம்பு என்ற சரியான கணக்கில் சேர்க்கப் படுகிறது,
இனி நகை விளம்பரங்களை பார்த்து ஏமாறாதீர்கள் !
இனி குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளை பார்ப்போம், கல் மற்றும் பாசி எடை கழித்து தரப்படுவ தில்லை கல் பாசி எடை உங்களிடம் தங்கத்திற்கான பணமாக வசூல் செய்து ஏமாற்ற படுகிறீர்கள்,

நீங்கள் வாங்கும் நகையை திரும்ப கொடுத்து நகையாக மட்டுமே வாங்க முடியும் பணமாக வாங்க முடியாது. 10 கிராம் சுத்தமான தங்கத்தில் 800 மில்லி கிராம் செம்பு என்ற சரியான கணக்கில் சேர்க்கப் படுவது இல்லை.

ஒரு வேளை நீங்கள் வெளியில் எங்காவது சோதனை செய்து கண்டுபிடித்து அந்த கடையில் போய் உங்களிடம் வாங்கிய நகையின் தரம் குறைகிறது என்று கேட்டால் கூட அங்கே மழுப்பலான பதிலும்  இதை வெளியே சொல்லாமல் இருக்க எவ்வளவு பணம் வேண்டும் என்ற கேள்வி தான் பதிலாக வரும்,
உளுந்து அல்வா செய்முறை !
இப்போது உங்களுக்கு அந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் வந்தா நஷ்டத்தை தருவார்கள்? 

எனவே குறைந்த சேதாரம் என்று போய் ஏமாற வேண்டாம், ஞாயமான சேதாரம் கொடுத்து நகைகள் வாங்கி தரமான தங்கத்தை வாங்கி செல்லுங்கள்.
Tags:
Privacy and cookie settings