மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ரத்தீஷ். இவருடைய மகள் பார்வதி ரத்தீஷ் மலையாள சினிமாவில் மதுர நாரங்கா என்ற படத்தின் மூலம் களம் இறங்கவுள்ளார்.
இந்த படத்தின் ஹீரோ, பார்வதியின் தம்பி தான். இந்த செய்தி அறிந்த அடுத்த நிமிடம் கேரளாவே அதிர்ந்தது.
மேலும், அக்கா-தம்பி எப்படி காதல் காட்சிகளில் நடிப்பார்கள் என அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். இதன்பின் இவர்களை சுற்றி பல வதந்திகள் சுற்ற, பார்வதியே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இவர் கூறுகையில் ‘இப்படத்தில் நாங்கள் இருவரும் நடிப்பது உண்மை தான், ஆனால், நீங்கள் நினைப்பது போல் ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் துளியும் கிடையாது.
நான் இந்த படத்தில் கல்லூரி மாணவியாக என் தம்பியின் சீனியராக நடிக்கின்றேன், தயவு செய்து இது போன்று தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்’ என கூறியுள்ளார்.