இந்தி டைரக்டர் சாஜித்கானுடன் திருமணமா? தமன்னா !

தமன்னாவையும், இந்தி டைரக்டர் சாஜித் கானையும் இணைத்து கிசுகிசுக்கள் பரவி உள்ளன. சாஜித்கான் இந்தியில் ம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற இரண்டு படங்களை தமன்னாவை கதாநாயகியாக நடிக்க வைத்து இயக்கினார்.
இந்தி டைரக்டர் சாஜித்கானுடன் திருமணமா? தமன்னா !
படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. 

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேசப்படுகிறது. இதற்கு தமன்னா பதில் அளித்துள்ளார். 

அவர் கூறியதாவது:- 

டைரக்டர் சாஜித்கானும் நானும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்ட மிட்டுள்ளதாகவும் தகவல் பரவுகிறது. அவர் இயக்கிய ம்மத்வாலா படத்தில் நான் நடித்தேன். 

அந்த படம் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தது. அதன் பிறகும் என்னை ஒதுக்காமல் இரண்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். 

இது அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது. இருவரும் நட்பாக பழகினோம். படப்பிடிப்பில் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். இதை வைத்துத் தான் இப்படி தவறான தகவல் பரவி இருக்கிறது. 

எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. வதந்திகளும் கிசுகிசுக்களும் மக்களை விரைவில் சென்று அடைந்து விடுகிறது. அப்படித்தான் இந்த காதல் வதந்தியும் பரவி இருக்கிறது.
இந்தி டைரக்டர் சாஜித்கானுடன் திருமணமா? தமன்னா !
இதுவரை யாரையும் நான் காதலிக்க வில்லை. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்புகிறேன். பாகுபலி என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படம். 

அந்த படத்தில் வாய்ப்பு தந்த டைரக்டர் ராஜமவுலி எனக்கு கடவுளாக தெரிகிறார். இந்தியில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து அங்கேயும் சிறந்த நடிகை என்ற பெயர் வாங்க ஆசை இருக்கிறது. 

எப்படித் தான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல கதை, நேரம், ரசிகர்கள் ஆதரவு, அதிர்ஷ்டம் எல்லாம் சேர்ந்து இருந்தால் ஜெயிக்கலாம். 

எனக்கு சினிமாவில் எந்த பின்புலமும் இல்லை. ஆனாலும் அதிர்ஷ்டம் இருந்ததால் உயர்ந்தேன் இவ்வாறு தமன்னா கூறினார்.
Tags:
Privacy and cookie settings