ஒரு மாத பரோலுக்கு பேரறிவாளன் மனு !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் உள் ளார். அவரது தந்தை குயில்தாசன் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. 
தந்தையை கவனித்துக்கொள்ள 1 மாதம் பரோலில் விடுவிக்க அனுமதி கோரி சிறைத்துறை தலைவருக்கு மனு அளித்துள்ளார். 

இந்த மனு தொடர்பான இறுதி முடிவை சிறைத்துறை தலைவர்தான் எடுப்பார் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:
Privacy and cookie settings