அஜித் கடந்த நவம்பர் மாதம் தனக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து கொண்டிருந்த முழங்கால் மற்றும் தோள்பட்டை வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் சின்ன சின்ன உடற்பயிற்சிகள் மூலம் தற்போது தேறி வரும் நிலையில் அவர் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டையும் கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் அஜித் பூரண குணமாகிவிடுவார் என்றும் குணமான பின்னர் இரண்டு மாத காலம் லண்டனுக்கு சென்று ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
பிப்ரவரியில் லண்டனுக்கு செல்லும் அஜித், வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் திரும்பி வருவார் என்றும், அஜித் சென்னை திரும்பியவுடன் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 57வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
அஜித் ஓய்வு எடுத்து சென்னை திரும்புவதற்குள் 'தல 57' படத்தின் ஆரம்பகட்ட பணிகளை முடிப்பதில் சிறுத்தை சிவா தீவிர முயற்சியில் ஈடுபடுவார் என்றும்
முதல்கட்டமாக அஜித் ஜோடியாக நடிக்கும் நடிகை பின்னர் டெக்னீஷியன்கள் ஆகியோர்களை தேர்வு செய்வதில் அவர் மும்முரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.