இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் சாதி தொடர்பாக நடந்த வன்முறை கலந்த போராட்டத்தால் தலைநகர் டில்லியில் கடுமையான நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டில்லிக்கு நீர் வழக்கும் முக்கிய ஆதாரமான முனக் கால்வாயில் உள்ள உபகரணங்களை ஜட் சமூகத்தை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்துவிட்டார்கள்.
கடுமையான நீர் விநியோக கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ள டில்லி நிர்வாகம் சில இடங்களில் இன்று முற்றாக நீர் இல்லாமல் போகலாம் என்று எச்சரித்துள்ளாது. அனைத்து பள்ளிக்கூடங்களும் திங்களன்று மூடப்பட்டிருக்கும்.
இந்திய சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறை குறித்து ஜட் சமூகத்தினர் கோபமடைந்துள்ளனர்.